மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை

டிசம்பர் 06,2018  IST

Comments

மலேசிய, கிள்ளான் பகுதியில் டிசம்பர் 3 - தேதி மாலை 7.30 முதல் 9 மணி வரை மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைபுனிதர் சீர்வளர்சீர் சாதலிங்க மருதாசல அடிகளார் ஆன்மிக உரை ஆற்றினார். தமிழிற்கு சைவத்திற்கும் உள்ள தொன்மையான சிறப்புகளை எடுத்துரைத்தார்.

சைவமே தமிழ், தமிழே சைவம் என்று சைவத்தோடு பின்னிப்பிணைந்து உள்ளது நமது தமிழ். தமிழில் நால்வர் பல்வேறு அறிய பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் கூறியது போன்று கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி என்று, மிக பழையன தொன்மையான மொழி, ஐவகை நிலத்தில் முதலில் தோன்றிய மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி, குறிஞ்சி நிலத்தில் வாழ்த மக்கள் பேசிய மொழி நம் தமிழ் மொழி, மொழியோடு நிறுவிடவில்லை குறிஞ்சி நிலத்திற்கான தெய்வமாக முருகனை போற்றி வணக்கத்தையும் வைத்திருந்தார்கள்.

சைவ திருமுறைகளில் பதினோராவது திருமுறையாக போற்றப்படுவது, திருமுருகாற்றுப்படை இலக்கியங்களில் தொன்மையானது,

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களில் தொன்மையானது, பத்துப்பாட்டில் முதன்மையானது திருமுருகாற்றுப்படை மேலும் பன்னிருதிருமுறையில் ஒன்றாக அமைந்துள்ளது, தமிழ் இலக்கியங்கள் முதல் முதலில் வகுக்கப்பட்டபோது முதல் முதலில் கிடைத்திருப்பது திருமுறை என்பது சைவத்திற்குண்டான பெருமைவாய்ந்தது.

இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை எடுத்துக்கொண்டால் இருண்டகாலம் என்றே கூறுவார்கள், இந்தக்காலங்களில் முத்தமிழை அழிவிலிருந்து காத்தவர்கள் நால்வர்களில் முதலிலே இருபவர்களான திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்மந்தர். அதனாலேதான் தமிழ் இன்று உலகெங்கிலும் வியாபித்திருக்கிறது இல்லையென்றால் அயல் மொழிகள் அழிந்திருக்கும் என்று பல்வேறு வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இதுபோன்று ஆன்மிக சமய பேச்சுக்கள் வழியாக நமது இளம் சந்ததியர் நமது சமயத்தைப்பற்றி அறிந்துகொள்ளமுடியும் மேலும் நம்முடைய குழந்தைகளுக்கு நமது தொன்மையான சமய விளக்கங்கள் கிடைத்தால் பிற சமயத்தவர்கள் முன்பு மனசங்கடங்கள் வராது காத்துக்கொள்வர், மலேசியாவில் பல்வேறு சமயப்பணிகளை செய்துவரும் மலேசிய நால்வர் அமைப்பு பாலகிருஷ்ணன் அவர்களை பாராட்டினார்.

-நமது செய்தியாளர்: வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

யாருக்கும் பின்னடைவு இல்லை : கிரண்பேடி

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடி, 5 மாநில தேர்தல் முடிவுகளை யாருக்கும் பின்னடைவாக கருதவில்லை. தேர்தல் முடிவு ...

டிசம்பர் 12,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us