ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

அக்டோபர் 01,2008  IST

Comments

தல வரலாறு : யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப் பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுழவயம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார். இவ்வாலயமானது ஆறு(6) நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமைக்குரியது.மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது.யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான பரராஜசேகரன் என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது.14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினார். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது.புரராஜசேகர மன்னன் காலம் 1478-1519 வரையாகும்.புரராஜசேகரன் போர் மேற்கொள்ளும் போது இப்பெருமானை வழிபட்டுச் சென்றதாகவும், நூற்றுக்கும் அதிகமான இளநீர்க்குலைகள் யானைமேல் ஏற்றி வந்தும், குடம் குடமாகப் பால் கொண்டு வந்தும் அபிஷேகித்து வணங்கினான் என்றும் நாளும் வற்றாது குளம்போல் நின்ற இடம் குளக்கரை எனவும் வழங்குவதாயிற்று.மன்னனால் ஆலயத்திற்கு அருகே ஒரு கிணறும் திருக்கேணியும் , திருமஞ்சக்கிணறும் தோண்டப்பட்டது.ஆகம விதிப்பட் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.


கருவறையில் இருக்கும் இவ்விநாகப்பெருமான் தனது வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக்கரத்தில் பாசத்தையும், கீழேயுள்ள வலக்கரத்தில் ஒடிந்த தந்தத்தையும், இடக்கரத்தில் மோதகத்தையும் தும்பிக்கையில் கும்பத்தையும் வைத்திருக்கின்றார். மேலும் சுளகு போன்ற இருசெவிகளும் பெரிய வயிற்றையும் உடையவராகவும் இடது பாதத்தை மடித்தும் வலது பாதத்தை தொங்கவிட்டபடி காடசிதருகின்றார். மேலும் இவ்வாலயத்திருப்பணி வேலைகளை இவ்வூர்ப்பிரமுகர்களும், அடியவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாலயம் கருவறை, அர்த்த மண்டபம்,மகா மண்டபம், சபா மண்டபம், ஸ்தம்ப மண்பம், வசந்த மண்டபம்,யாக சாலை, பாக சாலை, வாகன சாலை, மணி மண்டபம்,மணிக்கூட்டு வைரவர் ஆலயம் என்ற வகையில் அமைந்துள்ளது.ஆலயத்தில் தினமும் ஆறுகாலப்பூசைகள் நடைபெற்று வருகின்றன. நித்திய விநாகர் தினமும் வீதிசுற்றுவது வழமை மேலும் மகோற்சவ விழாக்கள், மாதப்பிறப்பு அபிடேகங்கள்,விசேட நாட்களான சிவராத்திரி, வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், ஆனி உத்திரம், ஆடிப்புரம், பூர்வபக்க சதுர்த்தி, அமரபக்க சதுர்த்தி, நவராத்திரி,கௌரி விரதம், கந்த சஷ்டி, திருவெம்பாவை,விநாயகர் சஷ்டி, முதலியனவும் கலசாபிஷேகம் முதலியனவும் நடைபெற்று வருகின்றது


கோயிலின் அமைவிடம்


யாழ்ப்பாணத்திலிருந்து இணுவில் நான்காவது மைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை வீதி இணுவிலை இரு பகுதிகளாக ஊடறுத்து தெற்கு வடக்காக செல்கின்றது. இவ்வீதியை கிழக்கு மேற்காக மானிப்பாய் வீதி வந்து தொடுகின்றது. இவ்வீதியானது கே.கே.எஸ் வீதியைத் தொட்டு மேற்கே இணுவில் கந்தசாமி கோயில் வரை சென்று திரும்பிப் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாக சென்று மருதடி விநாயகர் ஆலய வீதியைத் தொடுகின்றது. வீதியின் தெற்கே பரராஜசேகரர் ஆலயம் என்றால் வடக்கே இப்போது இந்துக்கல்லூரி என அழைக்கப்படும் சைவப்பிகாச வித்தியாசாலை அமைந்துள்ளது.இவ்வீதியின்; இருமருங்கும் ஆலயத்திருப்பணிக்கு உதவுவோர் இருக்கின்றனர். விபரங்களுக்கு :www.inuvilinfo.com

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் கூத்தாநல்லூர் இளைஞர் சங்க கூட்டம்

துபாயில் கூத்தாநல்லூர் இளைஞர் சங்க கூட்டம் ...

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை...

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்...

சிங்கப்பூரில் கதைக் களம்

சிங்கப்பூரில் கதைக் களம்...

Advertisement
Advertisement

8ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

பரிதாபாத் : அரியானாவில் பரிதாபாத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

நவம்பர் 26,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us