அருள்மிகு ராஜராஜேஸ்வரி பீடம், நியூயார்க் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு ராஜராஜேஸ்வரி பீடம், நியூயார்க்

அக்டோபர் 06,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலாகும். அருள்மிகு ராஜராஜேஸ்வரி பீடம் அமெரிக்காவின் ஜாம்பியா பகுதியில் சுமார் 18 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. இரண்டு அறைகளைக் கொண்ட சிறிய வீடு போன்று லுசாகாவின் தலைநகரில் சிலுபி ரோட்டில் உள்ள இடத்தில் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் தினசரி பூஜைகள், லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திர சதா நாமாவழி ஆகியன 1971 ம் முதல் துவங்கப்பட்டன. 1974ம் ஆண்டு சிவகாமசுந்தரி மற்றும் நடராஜர் ஆகிய சிலைகள் சென்னையிலிருந்து லுசாகாவிற்கு கொண்டு வரப்பட்டது. 1976 ம் ஆண்டிற்கு பிறகு சிவராத்திரி கொண்டாட்டங்கள், லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் போன்றவைகளும் துவங்கப்பட்டன. இந்த பாராயண பிரார்த்தனைகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் குவிய துவங்கினர். இதனால் ராஜராஜேஸ்வரி அம்மனின் புகழ் அமெரிக்கா மட்டுமல்லாது இந்திய துணைக் கண்டங்களான மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் பரவி இருந்தது. 1976 ம் ஆண்டு இக்கோயில் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற துவங்கியது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 45 நாட்கள் பூஜை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கனகமாலா ஸ்தோத்திர பாராயணமும் துவங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கிழக்கு பகுதியில் உள்ள 3 அறைகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. இப்பகுதியில் சிறிய அளவில் கோயில் ஒன்றும் கட்டப்பட்டது. பின்னர் அன்டாரியோ பகுதியில் மற்றொரு கோயிலும் கட்டப்பட்டது. 1991ம் ஆண்டு அருள்மிகு ராஜஜேஸ்வரி பீடத்தின் புதிய கோயிலில் அம்மன் சிலையுடன், கணேசர் மற்றும் அழகிய பனலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

முக்கிய தெய்வங்கள் : 1991 ம் ஆண்டு ஜனவரி 19 அன்று அம்மன், கணேசர் மற்றும் சிவலிங்கங்கள் ஆகியன தனி அறையில் மாற்றி அமைக்கப்பட்டன. இங்கு பவுர்ணமி தினங்களில் நவகிரக பூஜைகளும், நவராத்திரி தினங்களில் நவவாரண பூஜைகளும், சாரதா நவராத்திரி மற்றும் சிவராத்திரி, குரு பூர்ணிமா, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி போன்ற விழாக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வ சிலைகளை காண அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மொத்தம் 151 பீடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பூஜை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரங்கள், வீடுகளில் வைத்து பூஜை செய்ய பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் தேவஸ்தானம் ஆகியவற்றை சேர்ந்த இரண்டு ஸ்தபதிகள் இக்கோயிலில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 151 பீடங்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகள் வம்சா வழியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள கோயில் 1995 ம் ஆண்டு பக்தர்களின் காணிக்கைகள் மற்றும் அடமானமாக பெற்ற தொகையை கொண்டும் கட்டப்பட்டது. இப்பகுதியில் இருந்த புதர்கள் மற்றும் செடிகள் சரி செய்யப்பட்டு மிகப் பெரிய அளவில் இக்கோயிலின் பணிகள் துவங்கப்பட்டது.

கோயிலின் முக்கிய அம்சங்கள் : ஆடுகள் மற்றும் குதிரைகள் போன்றவைகள் வசிக்கும் இடத்திற்கு முன்புறமாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது சக்தி கோயிலின் தெய்வீக சூழ்நிலையாக கருதப்படுகிறது. கோயிலின் நிலம் ஈசானி மூலையிலிருந்து துவங்குகிறது (வடக்குகிழக்கு பகுதி). கோயிலுக்கு அருகில் உள்ள சிறு நீரோடை ரயில்வே நீரோட்டம் எனப்படுகிறது. இது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. கோயிலின் மேற்கில் பாயும் ஜீனிஸ் நதி வருண பிரதக்ஷணத்தை போன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறது. மேலும் இக்கோயிலைச் சுற்றி ஏராளமான கனிகள் நிறைந்த சோலைகளும்,வன விலங்குகளும் நிறைந்த அடர்ந்த வனங்களும் காணப்படுகிறது.கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில் பசுக்கள் மற்றும் குதிரைகளை பராமரிக்க சிறப்பு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. 1996 ம் ஆண்டு முதல் இக்கோயிலில் சண்டிஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. 1997 ம் ஆண்டு மே மாதம் இக்கோயிலுக்கான பூமி பூஜை இடப்பட்டது. ரோசிஸ்டர் பகுதியில் உள்ள பக்தர்களால் இக்கோயில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் முக்கிய சன்னதியில் அம்மனும், நிருத்தி மூலையில் கணேசரும் உத்தர மூலையில் சிவனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி, நவகிரகங்கள் ஆகியோருக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோயிலைச் சுற்றி நித்தியகலா தேவியர்களின் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

கோயில் நேரங்கள் :

திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 8.30----பகல் 2.30

மாலை 5.30----இரவு 8.30

சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 8----இரவு 9

பூஜை நேரங்கள் : பக்தர்கள் கூட்டம் வருவதைப் பொருத்து இக்கோயிலின் பூஜை வேளைகள் மாற்றி அமைக்கப்படுகிறது. முக்கிய பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் ஆகியன சனிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. தினமும் 3 வேளையும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9.30, பகல் 12.30 மற்றும் இரவு 7.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்: காலை 10, பகல் 12 மற்றும் மாலை 6

கோயில் முகவரி : Srí Vidya Temple, 
                                    6980 / 6970 East River Road,
                                    RUSH, New York, 14543  

தொலைப்பேசி : 585-533-1970

இ-மெயில் : info@srividya.org

இணையதளம் : www.srividya.orgAdvertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிட்னியில் சித்திரைத் திருவிழா

சிட்னியில் சித்திரைத் திருவிழா...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

லாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி

லாகோசில் சங்கமம் கலை நிகழ்ச்சி...

ஹாங்காங்கில் அன்னையர் தினம்

ஹாங்காங்கில் அன்னையர் தினம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)