அக்டோபர் 11,2008 IST
தலவரலாறு : கனடாவிலுள்ள வேத கலாச்சார சபாவின் சார்பில் அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வேத கலாச்சார சபா 1977 ம் ஆண்டு கட்டப்பட்டு, 1979 ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1981 ம் ஆண்டு குவன்னா மற்றும் திரினிடால் ஆகிய இடங்களில் இருந்த சில ஆதரவாளர்களின் உதவியுடன் ஒரு சிறிய வீட்டில் அருள்மிகு விஷ்ணு மந்திர் துவங்கப்பட்டது. 1984 ம் மார்ச் மாதம் சிறிய அளவில் விஷ்ணு மந்திர் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் சுமார் 15 ஆயிரம் மக்கள் கலந்து கொள்கின்றனர். தற்பொழுது இக்கோயில் சுமார் 30 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பில் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலில் இந்து சமய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் நிர்வாகத்தினர் கனடாவிற்கு வந்த போது அங்கு கோயில்கள் ஏதும் இல்லாததால் பள்ளி கலையரங்குகளிலேயே வழிபாடுகள் அனைத்தும் நடத்தப்பட்டன. எனவே இந்துக்களின் மதிப்பு, பாரம்பரியம் மற்றும் தர்மங்கள் போன்றவற்றை வேரூன்றச் செய்வதற்காக கனடாவின் முதல் கோயில் உருவாக்கப்பட்டது. கோயிலின் முன்புறம் உள்ள மகாத்மா காந்தி அமைதிப் பூங்காவில் மகாத்மா காந்தியின் 20 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் வட அமெரிக்காவில் கனடாவின் இந்து நாகரிக அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜை வேளைகள் :
திங்கள் கிழமை :
காலை 6.30-----மகாவிஷ்ணு சுப்ரபாதம் மற்றும் பூஜை
மாலை 6.30-----சிவ பூஜை, சிவலிங்க அபிஷேகம் மற்றும் தியானம்
இரவு 8.00------மங்கல ஆரத்தி
செவ்வாய்கிழமை :
காலை 6.30-----மகாவிஷ்ணு சுப்ரபாதம் மற்றும் பூஜை
மாலை 6.45-----ஹனுமன் பூஜை
புதன்கிழமை :
காலை 6.30------மகாவிஷ்ணு சுப்ரபாதம் மற்றும் பூஜை
இரவு 7.00-----அனைத்து தெய்வங்களுக்கான மங்கல ஆரத்தி
வியாழக்கிழமை :
காலை 6.30-----மகாவிஷ்ணு சுப்ரபாதம் மற்றும் பூஜை
மாலை 6.30-----தேவி பூஜை
சனிக்கிழமை :
காலை 6.30-----மகாவிஷ்ணு சுப்ரபாதம் மற்றும் பூஜை
8.00-----ஆரத்தி
9.00-----சிவலிங்க அபிஷேகம்
10.00-----நவகிரக பூஜை மற்றும் நவகிரக ஹவன்
11.00-----ஐயப்ப பூஜை இரவு
7.00-----ஹனுமன் ஆராதனை மற்றும் ஆரத்தி
ஞாயிற்றுக்கிழமை :
காலை 10.00-----சர்வ தேவியருக்கு சிறப்பு ஞாயிற்றுக்கிழமை பூஜை அல்லது தேவதை பூஜை 11.00-----மகாவிஷ்ணு அபிஷேகம்
11.15----------- தியானம்
பகல் 12.00-----ஆரத்தி
கோயில் முகவரி : Sri Vishnu Mandir, The Vedas Cultural Sabha. 8640 Yonge St. Richmond Hill (N. of Toronto), ON Canada, L4C 6Z4.
தொலைப்பேசி : 905-886-1724
பேக்ஸ் : 905-764-0442
இ-மெயில் : info@vishnumandir.com
இணையதளம் : www.vishnumandir.com
சென்னை : காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி உள்ளது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு மீது 2 ...
ஜூன் 19,2013 IST