அக்டோபர் 13,2008 IST
தலவரலாறு : அயர்லாந்தின் டப்ளின் பகுதியில் அமைந்துள்ள அழகிய சிறிய ஆலயம், அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். அயர்லாந்தில் உள்ள இந்து சமுதாய மக்களின் சீறிய முயற்சியின் பயனாக இக்கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 2003 ம் ஆண்டு விஜயதசமி அன்று நடத்தப்பட்டது. விஜயதசமி தினத்தன்று விநாயகர், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வங்களுக்கு பாரம்பரிய முறைப்படி சங்கல்ப்பம், கலச பூஜை, அர்ச்சனை மற்றும் ஆரத்திகள் செய்யப்பட்டு, பிரசாத விநியோகமும் நடைபெற்றது. இந்த பூஜையில் சுமார் 225 மக்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் உருவாவதற்கு பக்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடை பெரிதும் உதவிகரமாக இருந்தது. பக்தர்களின் கருத்துக்கள் மற்றும் ஆதரவு இக்கோயில் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் இந்த பூஜையின் போது கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கோயிலில் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. முக்கிய பூஜைகளின் போது அஷ்டோத்திரம், ஆரத்தி, அர்ச்சனை மற்றும் பிரசாத விநியோகம் ஆகியன நடைபெறுகின்றன. சிறப்பு பூஜைகள் நடைபெறும் காலங்களில் மாதம் முழுவதும் கலாச்சார முறையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி :
Sri Vinayaga Temple,
Ballyroan Community Centre, Marian Road, Rathfarnham, Dublin-14.
தொலைப்பேசி : 00353-86-8881905
பேக்ஸ் : 00353-1-6715564
இணையதளம் : http://ivt.ie/
புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2012ல் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 6.57 மில்லியன் வெளிநாட்டினர் ...
ஜூன் 18,2013 IST