வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில்

அக்டோபர் 31,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ளது, வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில். இக்கோயில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 24 ஆயிரம் சதுரடியில் இந்து சமூகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோயில் கட்டும் பணியில் ஈடுபட துவங்கினர். இக்கோயிலில் தினசரி வழிபாடு மட்டுமல்லாது கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. 1985 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மக்களின் கூட்டு முயற்சியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. பல முக்கிய பிரமுகர்கள் இக்கோயிலுக்கான நிலத்தை அளித்ததுடன் பல வருடங்கள் தொடர்ச்சியாக இக்கோயிலுக்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 20 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமான பணிகளுக்கான நிகழ்வுகள் 1990 ம் ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலின் பணிகள் 1991 ம் ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இக்கோயிலில் கலாச்சார மற்றும் மத நல்லிணக்க நிகழ்வுகள் ஆகியனவும் நடத்தப்பட்டன. இங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் குழந்தைகள் அதிக ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். 1994 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இக்கோயிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் இக்கோயிலில் பக்தர்களும், நிர்வாக உறுப்பினர்களின் குடும்பத்தினரும் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த துயர நிகழ்விற்கு பிறகு, நிலையான அழகிய ஆலயம் ஒன்றை அமைக்க நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு புதிய கோயில் வடிவமைத்துக் கட்டப்பட்டது. இரும்பு மற்றும் செங்கற்களைக் கொண்டு தீ பற்ற முடியாத கூரைகளைக் கொண்ட புதிய கோயில் கட்டப்பட்டது. சுமார் 12 வருடங்களுக்கும் மேலாக இக்கோயில் கட்டுவது தொடர்பான ஆலோசனையில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 1994 ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 3 ஆண்டுகள் கழிந்த பிறகே கோயில் பணிகள் நிறைவு பெற்றது. சுமார் 5 மொழிகள் அறிந்து, அதில் பூஜைகள் செய்யத் தெரிந்த புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயில் மட்டுமல்லாது அமெரிக்காவின் பெருமாபாலான இந்துக் கோயில்களும் இவரால் துவங்கி வைக்கப்பட்டது.

கோயில் நேரங்கள் :

திங்கள் - வெள்ளி : காலை 10.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00

சனிக்கிழமை : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00

ஞாயிற்றுக்கிழமை : காலை 11.00 - இரவு 8.00

தினசரி பூஜைகள் : காலை 11.30 மற்றும் இரவு 7.30

கோயில் முகவரி :

Hindu Temple and Community Center,

Hampton Roads,

P.O. Box 62146

Virginia Beach, VA 23462

தொலைப்பேசி : 757-382-7777

இணையதளம் : www.hindutemplehr.org



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் “ வெற்றிக் கொடி கட்டு” - இலக்கிய நிகழ்வு

சிங்கப்பூரில் “ வெற்றிக் கொடி கட்டு” - இலக்கிய நிகழ்வு...

சிங்கப்பூரில் சித்திரைத் திருவிழா பட்டிமன்றம்

சிங்கப்பூரில் சித்திரைத் திருவிழா பட்டிமன்றம்...

கான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

கான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்...

லேகோசில் தமிழ்ப் புத்தாண்டு

லேகோசில் தமிழ்ப் புத்தாண்டு...

Advertisement
Advertisement

நளினி வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதுலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று ...

ஏப்ரல் 27,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us