பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒக்லஹோமா இந்துக் கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பக்தர்களால் உருவாக்கப்பட்ட ஒக்லஹோமா இந்துக் கோயில்

நவம்பர் 13,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ள ஆலயம், ஒக்லஹோமா இந்துக் கோயிலாகும். இக்கோயில் இப்பகுதியில் வாழ்ந்த இந்திய கலாச்சார அமைப்பினரால் 1982 ம் ஆண்டு லாப நோக்கமற்ற மையமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் உருவாக்கப்பட்டது. 1984 ம் ஆண்டு 5 இப்பகுதியில் வாழ்ந்த 5 குடும்பத்தினரால் சுமார் 10 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் அமோக ஆதரவினால் 1989 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 4000 சதுரடி பரப்பளவில் இக்கோயில் கட்டிடம் உருவாக்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி அருள்மிகு வெங்கடேஷ்வரர் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார். பின்னர் 1994 ம் ஆண்டு இக்கோயிலில் இந்திய சிற்பிகளைக் கொண்டு பாலாஜி, கணேசர், சிவன், ராம பரிவாரங்கள் மற்றும் ராதா-கிருஷ்ணர் ஆகிய சன்னதிகள் உருவாக்கப்பட்டது. 1997 ம் ஆண்டு கோயிலுக்கென கூடுதலாக 5.11 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. மேலும் இக்கோயிலில் தீ விபத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடனான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு மே மாதம் கோயிலின் செப்பனிடும் பணிகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மே 2 ம் தேதி கோயிலின் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்டிட விரிவாக்கத்தின் போது புதிய மேற்கூரை, குளிர் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள், புதிய விளக்கு வசதிகள் போன்ற பணிகள் நடத்தப்பட்டு, ஓய்வு அறைகளும் ஆகம சாஸ்த்திர முறைப்படி அமைக்கப்பட்டது. அவற்றுடன் கூடுதலாக 6500 சதுரடி பரப்பளவில் மடப்பள்ளி, ஓய்வு அறை, வகுப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பிரம்மாண்ட ராஜகோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பின்னர் மகாலட்சுமி மற்றும் ஹனுமன் சன்னதிகளும் புதிதாக அமைக்கப்பட்டன.சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுடன் சுமார் 1.6 மில்லியன் டாலர்கள் செலவில் இக்கோயில் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

கோயில் நேரங்கள் :

திங்கள் - வெள்ளி : காலை 9.00 - 11.00 ; மாலை 5.30 - இரவு 7.30

சனி, ஞாயிறு : காலை 10.00 - பகல் 1.00 ; மாலை 4.00 - இரவு 7.00 (8.00)

கோயில் முகவரி :

Hindu Temple of Oklahoma,

P.O.BOX : 7495,EDMOND,

OK 73083-7495

அமைவிடம் :

7200 N.COLTRANE

OKLAHOMA CITY OK- 73121

தொலைப்பேசி : (405) 478 0787

பேக்ஸ் : (405) 478 0796

இணைதளம் :www.hindutempleokc.org

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அமெரிக்காவில் சிவபவித்ரோத்சவ வைபவம்

அமெரிக்காவில் சிவபவித்ரோத்சவ வைபவம்...

பிரிவுபசார விழா

பிரிவுபசார விழா...

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை, இலக்கியக் கூட்டம்

குவைத் தமிழோசை கவிஞர் மன்ற சிறப்பு கலை, இலக்கியக் கூட்டம்...

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்...

Advertisement
Advertisement

உத்தரகண்டில் நிலஅதிர்வு

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. கட்டிடங்கள் குலுங்கியதால் வீட்டிலிருந்து மக்கள் ...

ஆகஸ்ட் 22,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)