நவம்பர் 14,2008 IST
தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ரோசஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது அழகிய இந்துக் கோயில். 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோசஸ்டர் பகுதியில் இருந்த கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இப்பகுதியில் ஒரு கோயில் அமைக்க தீர்மானித்தனர். மிக விரைவிலேயே இக்கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இக்கோயிலுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டு 1989 ம் ஆண்டு தற்போதுள்ள 9.5 ஏக்கர் பரப்பளவிலான நிலம் பெறப்பட்டது. கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் 1990 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெறப்பட்டது. இக்கோயிலின் தோற்றம் வடிவமைக்கப்பட்டு, 1990 ம் ஆண்டு அக்டோபர் 22 ம் தேதி ஹொன்ரியட்டா நகர அமைப்பின் அனுமதி பெறப்பட்டது. 1991 ம் ஆண்டு ஜுலை 10 ம் தேதி இக்கோயிலின் முதல் ஆண்டு விழாவின் போது சந்த் மராரி பாபுவால் இக்கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. 1992 ம் ஆண்டு மே மாதம் 9 ம் தேதி ரமேஷ் பாய் ஓஷா மற்றும் சுவாமி சிதானந்த சரஸ்வதி ஆகியோரால் இக்கோயிலின் அஸ்திவார பூஜை நடத்தப்பட்டது. இவ்விழாவின் போது சத்ய நாராயண பூஜையும் நடத்தப்பட்டது. மேலும் இக்கோயிலின் சுற்றப்புறத்தில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்களால் சாமூஹ் பூஜையும் நடத்தப்பட்டது. இக்கோயிலின் கட்டிடப் பணிகள் 1993 ம் ஆண்டு வசந்த காலத்தில் துவங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இக்கோயிலின் முதல் கட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது. பின்னர் இக்கோயிலின் இறுதிக் கட்டப்பணிகள் 1994 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி : காலை 9.00 - 11.30 ; மாலை 6.00 - இரவு 8.30 ஆரத்தி : காலை 11.30 மற்றும் இரவு 8.00
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 4.30 - இரவு 8.30
ஆரத்தி : காலை 11.30 மற்றும் இரவு 8.00 .
புதன்கிழமை முழுவதும் கோயில் மூடப்படுகிறது.
கோயில் முகவரி : Hindu Temple of Rochester, 120, Pinnacle Road, Pittsford, NY 14602
Mailing Address Hindu Temple of Rochester
P.O. Box 20061 ,Rochester, NY 14602
தொலைப்பேசி : (585) 427-8091
இணையதளம் : www.hindutempleofrochester.com
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் 8 பேர் பலியாயினர். அறந்தாங்கி சாலை வல்லந்திராக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது தனியார் ...
ஜூன் 19,2013 IST