தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் ஹைட்ஸ் பகுதியில் அமைந்துள்ளது இந்து மற்றும் சீக்கிய மதங்களை இணைக்கும் அருள்மிகு சத்யநாராயணர் திருக்கோயில். இக்கோயில் குருமந்திர் என்ற சிந்தி கலாச்சார அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த குரு மந்திர் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாராகவும், இந்துக்களின் வழிபாட்டுத்தலமான கோயிலாகவும் விளங்குகிறது. சிந்தி கலாச்சார முறைப்படி அமைந்த இக்கோயிலில் இரு மதத்தினர்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள சத்ழநாராயண மந்திர் பழமையான கோயிலாகவும், இப்பகுதியில் உள்ள ஒரே குருமந்திராகவும் அமெரிக்கர்களால் கருதப்படுகிறது. நியூயார்க் மாகாணத்தில் இந்திய சமூகத்தினர் வளர்ச்சி அடைய துவங்கியதும் வழிபாடுகள் முதலிவற்றை அவர்களின் வீடுகளிலும் வாகனம் பழுதுபார்க்கும் இடங்களிலும் நடத்தினர். சத்ய நாராயணர் கோயில் கட்டுவதற்கான இட உதவி மற்றும் பொருளுதவி ஆகியன பொதுமக்கள், குறிப்பாக சிந்தி சமுகத்தினரிடமிருந்து பெறப்பட்டது. இக்கோயிலில் அஹிம்சா வழி பற்றிய இந்து மத போதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் , சொற்பொழிவுகள் போன்றவைகளும் போதிக்கப்படுகின்றன. மேலும் இக்கோயிலில் பாசுரங்கள் பாடுவது மற்றும் ஆர்வலர்களின் நிகழ்வுகள் போன்றவைகளும் ஊக்குவிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆன்மிகவாதிகள், புரோகிதர்கள் ஆகியோர் பெருமைபடுத்தப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். மேலும் வழிபாட்டுக் கூட்டங்களின் போது அவர்களின் ஆன்மிக சொற்பொழிவுகளும் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. இக்கோயில் 1987 ம் ஆண்டு நிறுவப்பட்டது.
கோயில் நேரங்கள் :
திங்கள் - வெள்ளி : காலை 7.30 - பகல் 1.00 ; மாலை 4.00 - இரவு 9.00
சனி, ஞாயிறு, விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் : காலை 7.30 - இரவு 9.00
கோயில் முகவரி : Satya Narayan Mandir, 75-15 Woodside Avenue, Jackson Heights, N.Y. 11373
தொலைப்பேசி : (718) 899-8863
இ-மெயில் : mandirny@yahoo.com
இணையதளம் : http://satyanarayanmandirnewyork.org
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங், சீனப்பிரதமர் லீ கெகியாங் இடையிலான பேச்சுவார்த்தை டில்லியில் துவங்கியது. நண்பகல் 12.30 மணியளவில் இருவரும் பத்திரிகையாளர்கள் ...
மே 20,2013 IST