ஜனவரி 22,2009 IST
தலவரலாறு : ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் உள்ள அழகு நிறைந்த எளிமையான ஆலயம் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். வழிபாட்டுத் தலம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரால் இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003 ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று இக்கோயிலுக்கான பணிகள் துவங்கப்பட்டது. விஜயதசமி தினத்தில் விநாயகர், சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சங்கல்பம், கலச பூஜை, அர்ச்சனை, ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகத்துடன் ஆலய ஆராதனைகள் துவங்கப்பட்டது. லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட தலை சிறந்த புரோகிதர்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள சுமார் 225 பக்தர்களால்தலவரலாறு : ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் உள்ள அழகு நிறைந்த எளிமையான ஆலயம் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலாகும். வழிபாட்டுத் தலம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரால் இக்கோயில் 2003 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003 ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று இக்கோயிலுக்கான பணிகள் துவங்கப்பட்டது. விஜயதசமி தினத்தில் விநாயகர், சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சங்கல்பம், கலச பூஜை, அர்ச்சனை, ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகத்துடன் ஆலய ஆராதனைகள் துவங்கப்பட்டது. லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட தலை சிறந்த புரோகிதர்களைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள சுமார் 225 பக்தர்களால் இக்கோயிலின் பூஜைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களிலேயே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. பூஜைகளை தவறாமல் மேற்கொள்வதற்காகவும், கோயில் பணிகளை நிர்மானிப்பதற்காகவும் இக்கோயிலுக்கென பிரத்யேக தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் மாதாந்திர பூஜைகள் எவ்வித தடையுமின்றி நடத்தப்பட்டு வருகின்றன. அஷ்டோத்திரம், ஆரத்தி, அர்ச்சனை, பிரசாதம் ஆகியவற்றுடன் இக்கோயிலின் முக்கிய பூஜைகள் நடைபெறுகின்றன. சிறப்பு பூஜைகள், மாதாந்திர பூஜைகள், விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயில்நடை சாற்றப்பட்டிருக்கும்.
கோயில் நேரங்கள் : பகல் 2.00---மாலை 6.00.
கோயில் முகவரி :
Ireland Vinayaka Temple,
Ballyroan Community Centre, Marian Road,Rathfarnham, Dublin 14
தொலைப்பேசி : 00353-86-8881905
பேக்ஸ் : 00353-1-6715564
இணையதளம் : http://www.ivt.ie
சென்னை : மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது. பொதுத்தேர்வில், 95,388 பேர், தோல்வி ...
ஜூன் 19,2013 IST