மலேசியாவில் பக்தி மனம் கமழும் நெகிரி செம்பிலான் முருகன் ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் பக்தி மனம் கமழும் நெகிரி செம்பிலான் முருகன் ஆலயம்

மே 23,2009  IST

Comments

தலவரலாறு: மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிலியாவ் என்ற சிற்றூரில் ரயில்வே நிலத்தில் எழிலுடன் ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளது. அக்காலம் ­மு­தல் இங்கு வாழ்ந்து வரும் இந்துக்கள் ஆலயத்தை நன்கு பராமரித்து வருவதுடன், 1970ம் ஆண்டு முதல் முருகனின் கார்த்திகை திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாலயத்தின் வரலாற்­றில், 1967ம் ஆண்டு தொடக்கத்தில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு முருகன் ஆலயம் வேண்டும் என்ற ஆ­சை­யில், பல நல்ல உள்ளங்களின் முயற்சியால் ஒரு சிறிய கொட்டகையாக ரயில்வே நிலத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலயத்தின் அஸ்திவாரம், அன்று மலேசியாவின் ரயில்வே அதிகாரியாக பணியாற்றிய எஸ்.ராமையாவின் தலைமையில் நிருவப்பட்டது. இந்தச் சிறிய ஆலயம். பக்தர்களின் பெருக்கத்திற்கேற்ப 1969ம் ஆண்டு ஆலயம் மேலும் சிறிது விரிவுப்படுத்தப்பட்டது. அன்றைய நிர்வாகத்தினரும் அன்பர்களும் கோவிலை விரிவுப்படுத்தும் வேலையில் அல்லும் பகலும் ஈடுபட்ட­னர். மே 1969ம் ஆண்டு, மலேசியாவில் ஊரடங்கு அமலில் இருந்த காலம், கோவிலின் விரிவுபடுத்தும் வேலையை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்­ணத்­­து­டன் இரவு 8 மணிக்கு மேல், ஊரடங்கு நேரத்திலும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிறகு 1970ம் ஆண்டு மேலும் விரிவாக்கப்பட்டு 'எழுந்தருள் முருகன்' அமைக்கப்பெற்று, திருமுருகனின் கார்த்திகை திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 1974ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை கார்த்திகை திருவிழாவுடன் தீ மிதி திருவிழாவும் விமார்சையாக நடத்தப்பட்டது. பிறகு இடப்பற்றாக்குறையால் தீமிதி விழா கைவிடப்பட்டது.1977ல் தற்போது இருக்கும் ஆலயம் எழுப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு, 1978ம் ஆண்டு ரயில்வே நிலத்தில் கோவில் நிறுவ அனுமதி பெறப்பட்டது. 1979ல் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, டத்தோ பத்மநாபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள், நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்து கலந்துக் கொண்டனர். அதன் பிறகு கோவில் கட்டி முடிக்கப்பட்டு 20-10-1984ல் முதலாவது மகா கும்பாபிஷேகம் ­ந­டத்­தப்­பட்­ட­து. எழுந்தருளும் முருகனுக்கு ஒரு ரதம் வேண்டும் என்ற தேவைக்கேற்ப இந்திய சிற்பிகளால் ரதம் உருவாக்கப்பட்டு 30-11-1987ல் ரத வெள்ளோட்டம் சிறப்பாக நடந்தேறியது. மறைந்த முருக பக்தர் கிருபானந்தவாரியார் 27-2-1987ல் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானை பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றி ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார். கடந்த 6-7-1997ல் பால ஸ்தாபனம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலயத்திற்­கு, 20-10-1997ல் 2வது மகா ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ­ந­டத்­தப்­பட்­ட­து.

கோயில் நேரம் : காலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை; மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

சிறப்பு நாட்கள்: திருக்கார்த்திகை (10 நாள் உபயம், இரத ஊர்வலம்), தைப்பூசம் (1 நாள் உபயம்)

கோயில் முகவரி:  Sri Murugan Temple,
                                             10th Mile Railway,
                                             71100 Siliau, Port Dickson,
                                             Negeri Sembilan Darul Khusus, Malaysia.

தகவல் தொடர்பு: குமார்-(6) 014-3809628; டாக்டர்.நாகராஜன்-(6) 019-6200333



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு

துபாயில் கதைத்தமிழ் 13-வது அனைத்துலக ஆய்வு மாநாடு ...

குவைத்தில் பொன்மாலை பொழுது

குவைத்தில் பொன்மாலை பொழுது...

துபாயில் சித்ராபவுர்ணமி விளக்கு பூஜை

துபாயில் சித்ராபவுர்ணமி விளக்கு பூஜை...

ஜித்தாவில் சித்திரை கலை விழா

ஜித்தாவில் சித்திரை கலை விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)