ஆலய வரலாறு : ஹம் நகரில் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அடியார்கள் குறைதீர்க்கும் அருள் அழகராகத் திகழ்கிறார். இவ்வருளாலயம் 1999ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பெற்று, மெய்யடியார்களது எண்ணம்போல் 2001ம் பிப்ரவரி மாதம் 07ம் தேதியன்று மகா கும்பாபிஷேகம், தைப்பூசத் தினத்தில் நடத்தப் பெற்றது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகைத் திதியில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் கந்தசஷ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் மற்ற அனைத்துச் சைவ சமய பண்டிகை நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.ஸ்ரீ ஆறுமுகவேலழகன் அருள் வேண்டி இம்மைக்கும் மறு மைக்கும் பேரருள் சேர்க்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.
ஆலய நேரம் : ஆலயம் தினந்தோறும் காலை 9:30மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காகத் திறந்தே இருக்கிறது. பூஜைகள் தினமும் காலை 10.00 மணி மற்றும் மாலை 06.30 மணி என இருவேளைகள் இடம் பெறுகின்றது.
முக்கிய திருவிழாக்கள் : இலங்கையில் சரித்திரப் புகழ் பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மஹோற்சவ காலத்தில் இக்கோயிலிலும் மஹாற்சவம் நடைபெற்று, அங்கு நடைபெறும் தேர்த்திருவிழா அன்று இங்கும் ஆறுமுக வேலழகர் திருவீதி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரிலே பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன், அடியார்களின் அரோகரா கோஷத்துடன், நாதஸ்வர மேள இசை முழங்க எம்பெருமான் தேர் ஏறி பவனி புறப்படும் காட்சி காணும் பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பெருக வைக்கும். பக்தி வெள்ளத்தில் அடியார்கள் மிதப்பதையும் காணலாம். கோவில் அமைந்த சூழலும் தெய்வ அருளும், ஒரு அழகு மயிலைத் தானகவே ஈர்த்து வந்துள்ளது. மழைமேகம் கண்டு ஆடும் மயில் இங்கு பக்தர்களைக் கண்டாலே தோகை விரித்து ஆடும். ஆடும்மயிலின், அற்புதம் காணவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஆறுமுகவேலழகரின் அருள்பெறவும் பக்தர்கள் சூழ்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஆலய அமைவிடம் : இவ்வருள் ஆலயம் ஜெர்மனியின் ஹம் நகரில் ரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிட நடை தூரத்திலேயே அமைந்துள்து.
ஆலய முகவரி : ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம்,
ரூன் ஸ்ட்ரீட் 2 எஃப்- 59065, ஹம், ஜெர்மனி.
ஆலய தொலைப்பேசி : 02381/29103
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
திருவாரூர்: திருவாரூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் படுத்திருந்த 3 பேர் ரயில் மோதி பலியானார்கள். திருவாரூர் மாவட்டம் அத்திப்புலியூரில் கோயில் திருவிழாவில் கலந்து ...
மே 20,2013 IST