சிவ- விஷ்ணு கோயில், லிவர்மூர், கலிபோர்னியா

ஜூன் 01,2008  IST

Comments

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 1977ல் இந்து சமுதாய கலாசார மையம் துவக்கப்பட்ட நாளில் இருந்தே ஒரு இந்து கோயிலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்தது. அந்த எண்ணம் 9 ஆண்டு கழித்து 1986ல் நிறைவேறியது. கலிபோர்னியா மகாணத்தில் லிவர்மூர் பகுதியில் சிவ- விஷ்ணு கோயில் கும்பாபிஷேகம் 1986ல் நடைபெற்றது.

1998ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்த கோயில் வடக்கு மற்றும் தென் இந்திய பாரம்பரியங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.

1997ல், பிரதான கோயிலை ஒட்டி ஒரு அரங்கமும் சமையல் அறையும் கட்டப்பட்டன. இதன் மூலம் இது ஒரு திருமண மண்டபமாகவும் செயல்படத் துவங்கியது.

1994-- 1999ல் பக்தர்கள் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. உதாரணமாக புத்தாண்டு தினத்தன்றும் கணேச சதுர்த்தி அன்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து கோயிலை மேலும் விஸ்தரிக்க முடிவு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு அடுத்த மகாகும்பாபிஷேகம் நடத்தப்படுவதற்குள் இந்த விஸ்தரிப்பு பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் பூஜை நேரங்கள்:

கணேசர்: ககர கணபதி அர்ச்சனை: செவ்வாய் கிழமை: மாலை 06-15 மணி முதல் 07-15 மணி வரை; அபிஷேகம்: ஞாயிறு: காலை 10 மணி; அபிஷேகம் மற்றும் அர்ச்சனை: சங்கடஹர சதுர்த்தி: பவுர்ணமி கழித்து 4வது நாள்: மாலை 06- 30 மணி
சிவா சுப்ரபாதம்: ஞாயிறு: காலை 09-00 மணி; அபிஷேகம்: நாள்தோறும்: காலை 09- 30 மணி; சகஸ்ரநாம அர்ச்சனை: பிரதோஷம்: மாலை 06- 30 மணி; சிவபெருமானுக்கு 108 கலசாபிஷேகம் மற்றும் வில்வ அர்ச்சனை: மகா சிவராத்திரி: மாலை 06- 30 மணி; சிவ கல்யாணம் 2வது சனி: பிற்பகல் 3 மணி
வெங்கடேஸ்வரா (பாலாஜி) சுப்ரபாதம்: சனி மற்றும் ஞாயிறு காலை 09-00 மணி; அபிஷேகம்: சனி: காலை 10-00 மணி; வஜ்ர கிரீட சேவை, வஸ்தரா சமர்ப்பணம்: முதல் சனி: காலை 11- 30 மணி; சகஸ்ர கலச அபிஷேகம், முத்தங்கி சேவை: 2வது சனி: காலை 10-00 மணி; திருப்பாவாடை சேவை: 3வது சனி: காலை 11-30 மணி; புஷ்ப சேவை: 4வது சனி: காலை 11-30 மணி; சகஸ்ர நாம அர்ச்சனை: திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 10-00 மணி; சகஸ்ர நாம அர்ச்சனை: ஷ்ராவண நட்சத்திரத்தன்று மாலை 06-30 மணி; பாலாஜி போக மூர்த்தி அபிஷேகம், அர்ச்சனை: ஏகாதசி அன்று மாலை 06-30 மணி; நிஜ நேத்ர, பட தரிசனம்: வெள்ளிகிழமைதோறும்; நரசிம்ம அபிஷேகம்: அர்ச்சனை: சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 06-300 மணி; பாலாஜி கல்யாணம்: சனிக்கிழமை பிற்பகல் 03-00 மணி

கார்த்திகேயர் அபிஷேகம்: ஞாயிறு: 11-30 மணி; சகஸ்ரநாம அர்ச்சனை: சுக்ல சஷ்டி அன்று மாலை 06-30 மணி; அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை: கிருத்திகை அன்று மாலை 06-30 மணி; சுப்ரமண்ய கல்யாணம்: 3வது சனி: பிற்பகல் 03-00 மணி

பார்வதி, லட்சுமி, பூதேவி, தசபுஜா துர்கை அபிஷேகம்: வெள்ளி: காலை 10-30 மணி; லலிதா சகஸ்ரநாம பாராயணம்: பர்ணிமா: மாலை 06-30 மணி; லட்சுமி சகஸ்ரநாம அர்ச்சனை: திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 09-30 மணி; கனக துர்கா அபிஷேகம்: ஞாயிறு: மாலை 04-30 மணி

ராமர் அபிஷேகம், அர்ச்சனை: புனர்பூச நட்சத்திரத்தன்று மாலை 06-30 மணி

நரசிம்மர் அபிஷேகம், அர்ச்சனை: சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 06-30 மணி

ஆஞ்சநேயர் அபிஷேகம், அர்ச்சனை: ஞாயிறு பிற்பகல் 03-00 மணி

காலபைரவர்  அபிஷேகம், அர்ச்சனை: 4வது ஞாயிறு: மாலை 04-30 மணி

துவார கணபதி, நாகராஜர், கருடர், நந்தி அபிஷேகம், அர்ச்சனை: சனி: காலை 11 மணி

சிவ- விஷ்ணு பிரமோற்சவங்கள், புஷ்ப யகாம், கணேசர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, ஆரூத்ரோற்சவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ராம நவமி, ஹனுமந்த் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, தீபாவளி, வரலட்சுமி விரதம், ஐயப்ப மகர தீபம், உகாதி, மீனாட்சி கல்யாணம், ஸ்கந்த சஷ்டி போன்ற வருடாந்திர விழாக்களும் நடைபெறுகின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை

சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை...

பாரிசில் விவேகானந்தர் விழா

பாரிசில் விவேகானந்தர் விழா...

பிரிஸ்பேனில் கர்நாடக இசைக் கச்சேரி

பிரிஸ்பேனில் கர்நாடக இசைக் கச்சேரி...

ஆக.,9ல் வான்கோவர் வீதிகளில் தேர் பவனி

ஆக.,9ல் வான்கோவர் வீதிகளில் தேர் பவனி...

Advertisement
Advertisement

மழை நீர் சேகரிப்பு :ஒரு கோடி ஒதுக்கீடு

விருதுநகர் : மேற்கு தொடர்ச்சி மலையில் மழை நீர் சேகரிப்பு செய்ய, அரசு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் வனங்கள் பரப்பு குறைந்து ...

ஜூன் 20,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us