ஆலய வரலாறு : அரிசோனாவின் போனிக்ஸ் பகுதியில் இந்திய அமெரிக்க கலாச்சார மற்றும் மதங்களின் ஒருங்கிணைந்த சின்னமாக விளங்குவது பாரதிய ஏக்தா மந்திராகும். இக்கோயில் 1987ம் ஆண்டு சமூக ஒருங்கிணைப்பு கூடமாக இந்திய சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் இவ்வமைப்பை கொண்டு சமூக, கலாச்சார மற்றும் மத தொண்டு புரிந்து வந்தனர். மேற்கு மெரிலாந்து பகுதியில் 1988ம் ஆண்டு சமுதாய கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் கடனாக பெற்ற தொகையை கொண்டு 1994ம் ஆண்டு சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்திய அமெரிக்க சமூக நிகழ்வுகள் பலவும் இங்கு நடைபெற துவங்கியது. 1999ம் ஆண்டு அமைப்பிற்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவின் மூலம் கோயிலுக்கான நிலமும் நிதியும் திரட்டப்பட்டது. பின்னர் சமூதாய கூடத்தையே விரிவுபடுத்தி, வழிபாட்டு தலமாக மாற்றவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சமூக அமைப்பினரின் சீறிய முயற்சியால் கோயிலுக்கென் 4.5 ஏக்கரில் நிலம் பெறப்பட்டது. 2001ம் ஆண்டு அரிசோனா பகுதியில் பாரதிய ஏக்தா மந்திர் லாப நோக்கமற்ற அமைப்பாக அமைக்கப்பட்டது. மக்கள் கூடும் இடமாக உருவாக்கப்பட்ட ஏக்தா மந்திர், மெல்ல மெல்ல சிற்ப கலைகள் கொண்டு கோயில் மேம்படுத்தப்பட்டது. சுமார் 200 குடும்பங்களின் ஒத்துழைப்புடன் தற்போது 12310 சதுரடியில் ஏக்தா மந்திர் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
முக்கிய தெய்வங்கள் : விநாயகர், சிவன், வெங்கடேஷ்வரர், ராம பரிவாரங்கள், கிருஷ்ணர்.
கோயில் நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழளைகள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Bharatiya Ekta Mandir of Arizona
Hindu and Jain Temple , Phoenix
A Registered non-profit organizationIRS 501-c3
2804 W. Maryland Ave.,
Phoenix AZ 85017 இணையதள முகவரி : http://www.ektamandirarizona.org/index.html
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
சேலம்: சேலத்திலிருந்து கரூர் வரை புதிய பயணிகள் ரயில் சேவை துவங்கிது. சேலத்திலிருந்து வரும் 27ம் தேதி முதல் காலை 6 மற்றும் மாலை 5.30 மணிக்கு புறப்படும். கரூரிலிருந்து காலை ...
மே 25,2013 IST