அருள்மிகு மாரியம்மன் ஆலயம், ஹோ சி மின்

ஜூன் 25,2010  IST

Comments

தலவரலாறு : வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் அருள் காட்சியாய் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழக கட்டிடக்கலை கலைஞர்களால் கட்டப்பட்டதாகும்.

கோயில் அமைப்பு : கோயிலின் வெளிப் பிரகாரத்தில் கணேசர் மற்றும் முருகன் சிலைகள் முறையே வலது மற்றும் இடது பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அற்நுதமான சிற்க வேலைப்பாடுகளுடன் அமைந்த ஏராளமான சிற்பங்களைக் கொண்ட 12 மீட்டர் உயரமுடைய ராஜகோபுரம் கோயிலின் முகப்பு வாயிலில் கம்பீர தோற்றத்துடன் நம்மை வரவேற்கிறது. கருவறைக்கு முன்புறம் உள்ள பிரகாரத்தில் லட்சுமி, முருகன் மற்றும் பிற தேவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக மாரியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்கோயிலில் நடராஜர், சிவன், பிரம்மா, விஷ்ணு, காளி, பிரம்மசக்தி, சாமுண்டி, திருமகள், மகேஸ்வரி, மீனாட்சி, வாலாம்பிகை, ஆண்டாள், காமாட்சியம்மன், கருமாரியம்மன், சிவகாமி மற்றும் பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் வழிபாட்டிற்கென பிரம்மாண்ட தியான மண்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் : வியட்நாமில் வாழ்ந்த செட்டியார் இனத்தவர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. செய்கான் பகுதியைச் ‌சேர்ந்த சுமார் 50 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் வியட்நாம் மற்றும் சீன இனத்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் மாரியம்மனின் சக்தியை அனுபவத்தால் உணர்ந்து, வியந்து செல்லும் காட்சியை இக்கோயிலில் நாள்தோறும் காணமுடிகிறது.

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்...

கனடாவில் கோமாதா பூஜை

கனடாவில் கோமாதா பூஜை...

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி...

Advertisement
Advertisement

துணைப்பதிவாளர்கள் 6 பேர் இடம் மாற்றம்

தமிழக கூட்டுறவு துறையில் துணைப்பதிவாளர், ஆறு பேரை இடமாற்றம் செய்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடம் அடைப்பு குறிக்குள் உள்ளது. அதன் ...

மே 26,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us