ஆலய வரலாறு : அமெரிக்காவின் இதாஹோ மாகாணத்தில் உள்ள சன்வேளி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு முருகன் திருக்கோயில். கலாச்சார மைத்துடன் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கிய தெய்வம் பழனியாண்டவர் ஆவார். கற்பகிரகத்தில் உள்ள இவரின் விக்ரஹம் இந்தியாவில் பழநி மலை ஆண்டவரின் உருவத்தை ஒத்துள்ளது. ஆண்டிக் கோலத்தில் மலை மீது காட்சி தரும் முருகப் பெருமான் இம்மலையில் நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை. யோகா மற்றும் தியான பயிற்சி மேற்கொள்வோர் பலர் இக்கோயிலுக்கு நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இயற்கை சூழ்ந்த சமவெளி பகுதியாக விளங்குவதால் யோகா மற்றும் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக இக்கோயில் திகழ்கிறது. எந்தவிதமான சீதோஷண நிலை காணப்பட்டாலும் கெட்சூம் பகுதி பச்சை நிறம், தங்க நிறம், வெண்மை நிறம் ஆகியனவாக மாறி மாறி காட்சி அளிக்கிறது. 5750 அடி உயர சிறிய கிராமமான கெட்சூம், இதாஹோவில் இருந்து 12000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 8800 அடியில் மலை மீது வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் மூலவராக காட்சி தரும் முருகப் பெருமானும் கையில் வேலுடன் எளிமையாக, சாந்த ஸ்வரூபமாக காட்சி தருகிறார்.
முக்கிய தெய்வங்கள் : பழநி தண்டாயுதபாணியுடன் கணேசர் பத்து கரங்களுடன் மகாகணபதியாக காட்சி தருகிறார். அவர்களுடன் சிவன் நடராஜராகவும், நர்மதேஸ்வர லிங்கமாகவும் அருள்பாலிக்கிறார். யோக நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், நவகிரக சன்னதியும் இக்கோயிலில் அமைந்துள்ளது. வாரம்தோறும் ஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
கோயில் நேரங்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் கோயில் திறக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோயில் நடை திறக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri Murugan Temple and Cultural Center of Sun Valley 160 North Main Street, Post Box: 6454, Ketchum, ID 833340
இணையதளம் : http://www.sunvalleytemple.org/
மேலும் செய்திகள் உங்களுக்காக ... சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டில் ...
மே 23,2013 IST