அமீரகத் தமிழ் மன்றத்தின் புதிய நிர்வாகிகள்

டிசம்பர் 24,2010  IST

Comments

துபாய் : அமீரகத் தமிழ் மன்றம் கணினியில் தமிழின் செயல்பாட்டை பரவலாக்கும் நோக்கத்தோடு கடந்த 16 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வருகிறது. 'தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வகை செய்வோம்' என்ற கொள்கையோடு நல்ல தமிழில் பேசவும் எழுதவும் உற்சாகப்படுத்தும் இந்த அமைப்பு ஆண்டு தோறும் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும் ஆண்டு விழா மலரையும் வெளியிட்டு வருகிறது. இதைப்போன்றே 'தொலைக்காட்சியில் தொலைந்த கண்களைப் புத்தகங்கள் மூலம் மீட்டெடுப்போம்' என்ற முழக்கத்தோடு தொழிலாளர் முகாம்களில் தொழிலாளர்களுக்காக நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. திறந்த அமைப்பாக ஜனநாயகத் தன்மையுடன் இயங்கும் இவ்வமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்ட விழாவில் இவ்வாண்டுக்கான நிர்வாகிகளின் பட்டியலை தற்போதைய தலைவர் ஆசிப் மீரான் அறிவித்தார்.

அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவராக காமராஜனும், உதவித் தலைவராக சிவகுமாரும், பொதுச் செயலாளராக ஜெஸிலா ரியாசும், கலைச் செயலாளராக பாரூக் அலியாரும், இணைச் செயலாளராக ரமணியும், பொருளாளராக நஜ்முதீனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக பானு காமராஜன், சுமதி சுப்ரமணியன், வி.கார்த்திகேயன், கார்த்திகேயன் பொன்னம்பலம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிப் மீரான்,ஜெகுபர், அகமது முகைதீன் ஆகியோர் அமைப்பின் ஆலோசகர்களாக பலம் சேர்ப்பார்கள்.

- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

பொமோனாவில் அட்சையதிரியை

பொமோனாவில் அட்சையதிரியை...

லண்டனில் பரதக்கலை

லண்டனில் பரதக்கலை...

Advertisement
Advertisement

கைதாகிறார் குருநாத் மெய்யப்பன்?

சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டில் ...

மே 23,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us