அருள்மிகு திருக்கோணேஸ்வரர் கோயில், திருகோணமலை

டிசம்பர் 25,2010  IST

Comments

அமைவிடம் : இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் கோயில் உள்ளது. இது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோயிலாகும்.

பண்டைய வரலாறு : வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில், மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி.மு.306 இல் நிகழ்ந்த கடல் ‌கொந்தளிப்பில் அக்கோயில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக இலங்கைச் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேஸ்வர பெருமானுக்கு இன்றும் மலைப் பூஜை செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூல ஸ்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் எஞ்சிய பகுதி கடலுக்கு அடியில் உள்ளதென 1961ல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மெக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.

ராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேஸ்வரரை பூஜித்து வந்தான் என்றும், ராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்றும் தட்சிண கலாய புராணம் கூறுகின்றது. இம்மலைப் பாறையில் ராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது இதற்கு சான்றாக விளங்குகிறது. ராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்று புத்த சமய வரலாற்று நூல் ஒன்று கூறுகின்றது. கடல் சீற்றத்திற்கு பின் மீண்டும் சுவாமிமலை உச்சியில் அமைக்கப்பட்ட கோயில் கி.பி.7ம் நூற்றாண்டில் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. இதனையே திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் தாயினும் நல்ல தலைவர் என்னும் தேவாரத்தில் போற்றிப் பாடியுள்ளார்.

புதிய கோயில் வரலாறு : 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்த பொழுது விஷ்ணு, மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு சுவாமிமலைக்கு அருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிச் சபையின் பெருமுயற்சியால் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963ம் ஆண்டு மார்ச் 03ம் தேதியன்று மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


மூர்த்திச் சிறப்பு : இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேஸ்வரர். இறைவி பெயர் மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. சோழ நாட்டு அரசி சீர்பாததேவி கப்பல் வழியாக இலங்கைக்கு சென்றார். திருகோணமலை இறைவனை வணங்கி விட்டு அரசி புறப்படும் போது கப்பல் நகரவில்லை.வேதனையடைந்த அரசி விநாயகப் பெருமானை வணங்கினார். பின்னர் படகோட்டியை கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள். கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்த பின்னர் கப்பல் மீண்டும் ஓடத்தொடங்கியது. கடல் கொந்தளிப்பால் கடலுக்குள் சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர் விக்கிரகம் மீண்டும் பெறப்பட்டது.


தலச்சிறப்பு : குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை,திருக்குணாமலை, திருமலை, தென் கைலாயம், கோகர்ணம், திருகூடம், மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.

தீர்த்தச் சிறப்பு : இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது ஐதீகம். சுவாமி மலையின் தெற்கு பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம் இப்பொழுது இருக்கின்றது.

முக்கிய விழாக்கள் : இங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேஸ்வரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும்.

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் கரிகாலன் விருது வழங்கும் விழா

சிங்கப்பூரில் கரிகாலன் விருது வழங்கும் விழா...

பிரானசில் விநாயகர் சதுர்த்தி தேர்த்திருவிழா

பிரானசில் விநாயகர் சதுர்த்தி தேர்த்திருவிழா...

அபுதாபியில் வௌிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கு

அபுதாபியில் வௌிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கு...

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா...

Advertisement
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:மேட்டூர் அணையில் நீர்வரத்து 6,718 கன அடியிலிருந்து 8,298 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக நீர் திறப்பு விநாடிக்கு 18900 கன அடியாக உள்ளது. அணையின் ...

செப்டம்பர் 23,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us