மலேசியாவில் சுந்தர வடிவான சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்

மே 20,2008  IST

Comments

தலவரலாறு : மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி என்ற அழகிய ஊரில் அமைந்துள்ள அற்புத ஆலயம், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான ஆலயமாகும். 1914-ம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமானப் பணிகள், ஆதினம் அண்ணாசாமி பிள்ளை என்பவரால் துவங்கப்பட்டது. 1924-ம் ஆண்டு இக்கோயிலின் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1972-ம் ஆண்டில் இக்கோயிலில் கல்யாண மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1974-ம் ஆண்டு நிறைவடைந்தன. இக்கோயிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் 1997-ம் ஆண்டும், அடுத்த கும்பாபிஷேகம் 2000-ம் ஆண்டும் நடத்தப்பட்டது. இந்த ஆலயம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இவ்விடத்தில் ஒரு மேஜிஸ்டிரேட் நீதி மன்றம் இருந்தது. இந்த ஆலயத்தை கட்டுவதற்காக 1981-ல் அண்ணாசாமி பிள்ளை இந்த நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து வாங்கினார். பிறகு, 1924-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன், 1936-ம் ஆண்டு பெரிய ஆலயமாக கட்டி முடிக்கப்பட்டது. பிரம்மாண்டமான ராஜகோபுரத்துடன் கெடா மாநிலத்தின் மிகப் பெரிய கோயிலாக இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

முக்கிய விழாக்கள் : முருகப் பெருமானுக்கு உரிய அனைத்து விழாக்களும் இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத் திருநாள், மூன்று நாட்கள் திருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சுமார் 6000 பால்குடங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அலகுக் காவடிகள் இவ்விழாவின் போது இடம்பெறுகின்றன. இவ்விழாவில் மலேசிய மக்கள் மட்டுமின்றி, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் மக்களும் கலந்து கொள்கின்றனர்.

கோயில் நேரங்கள் : காலை 5.30 முதல் பகல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் வழிபாட்டிற்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது. மேலும், காலை 7 மணிக்கு காலை பூஜையும் மாலை 6 மணியளவில் மாலை பூஜையும் நடத்தப்படுகிறது.

கோயில் முகவரி :

Sri Subramania Swami Devashthanam,

Jalan Kuala Ketil,

08000 Sungai Petani,

Kedah Darul Aman, Malaysia

தொலைப்பேசி : 04-4212076

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் கூத்தாநல்லூர் இளைஞர் சங்க கூட்டம்

துபாயில் கூத்தாநல்லூர் இளைஞர் சங்க கூட்டம் ...

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை...

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்...

சிங்கப்பூரில் கதைக் களம்

சிங்கப்பூரில் கதைக் களம்...

Advertisement
Advertisement

தொலைபேசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை ...

நவம்பர் 27,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us