கலிபோர்னியாவில் தமிழ் வானொலி ஒலிபரப்பு

நவம்பர் 06,2012  IST

Comments

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதியில் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு என தமிழ் சிறப்பு வானொலி நிகழ்ச்சி 'காலை தென்றல்' வாரம் தோறும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை கேஎல்ஓகே 1170 ஏஎம் ரேடியோ அலைவரிசையில் அரிமா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்குகிறார்கள் . இதில் மங்கள நாதம் , ஆன்மீக விவரங்கள் நிறைந்த பக்தி பாமாலை, குழந்தைகளுக்கான குட்டீஸ் கார்னர்,அரிமாவின் ராக கீதங்கள் ,நேயர் விருப்பம்,ஓல்ட் இஸ் கோல்ட்,நேயர்களுக்கான விளையாட்டு அம்சம் கொண்ட சவாலே சமாளி மற்றும் நேயர்களுக்கு பயன் தரும் வகையில் டிப்ஸ் கார்னர், ஜாப்ஸ் கார்னர் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.குட்டீஸ் கார்னரில் கேட்கப்படும் குழந்தைகளுக்கான அறிவு சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் குழந்தைகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு தக்க விதத்தில் ஊக்குவிக்கபடுகிறார்கள். மேலும் நேயர்களுடன் கருத்து பரிமாற்றம் இடம் பெறுகிறது. இந்நிகழச்சிகள் அனைத்தையும் வீ. ரமேஷ் மற்றும் சாந்தி ரமேஷ் தொகுத்து வழங்குகிறார்கள்.
'அரிமாவின் காலை தென்றல்' தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் பிற மாகாணத்தில் வாழும் தமிழர்களும் மற்றும் உலக தமிழர்கள் அனைவரும் www.arimausa.com என்ற இணையதளத்தில் உள்ள லிசன் லைவ் பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை காலை பிஎஸ்டி டைம் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை கேட்டு மகிழலாம். முந்தைய பதிவு நிகழ்ச்சிகள் அனைத்தையும் அச்சீவ்ஸ் இல் கேட்கலாம். அரிமா எண்டர்டைன்மெண்ட், தமிழ் நெஞ்சங்களின் பாடும் திறனை ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ் கரோக்கி கிளப்' என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்கள். இந்த அமைப்பு மாதம் தோறும் 'கரோக்கி' பாட்டு நிகழ்ச்சிகளை வளைகுடா பகுதியில் வாழும் தமிழர்களுக்காக நடத்துகிறார்கள்.எனவே இப்பகுதியில் வாழும் பாடும் திறமை உள்ள மற்றும் விருப்பம் உள்ள தமிழர்கள் இந்நிகழச்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tamilkaraokeclub.com  இல் உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
- தினமலர் வாசகர் பாஸ்கர்

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பாரிசில் தமிழ் சித்திரை விழா

பாரிசில் தமிழ் சித்திரை விழா...

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கலை விழா

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கலை விழா...

வியன்னாவில் சித்திரை திருவிழா

வியன்னாவில் சித்திரை திருவிழா...

Advertisement
Advertisement

கலவரம்: இதுவரை 115 பேர் கைது

கும்மிடிப்பூண்டி:சின்னமாங்கோடு கலவரம் தொடர்பாக, நேற்று, மேலும், 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை, 115 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, ...

ஏப்ரல் 19,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us