மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 1873ம் ஆண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிறுவப்பட்டது. கோலாலம்பூரின் மிக பழமையான கோயில் இதுவாகும். இக்கோயில் சீனா டவுனில் ஜலன் பந்தர் பகுதியில் அமைந்துள்ளது. 1968ம் ஆண்டு கோயில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது.
இந்த கோயில் இந்திய வம்சாவளியினருக்கு மிக முக்கியமான வழிபாட்டு தலமாகவும், கலாசார மற்றும் தேசிய சொத்தாகவும் விளங்குகிறது. தென்னிந்திய கோயில்களை போல கோயில் வாயிலில் கோபுரமும், கோயிலினுள் வழிபாட்டு இடத்தின் உட்கூரையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கோயிலின் முக்கிய பகுதியில் விமானங்களுடன் 3 சன்னதிகள் உள்ளன. கோயிலின் வெளிப்புறம் இருந்தும் இந்த விமானங்களை பார்க்கலாம். 4 சிறிய சன்னதிகளும் உள்ளன. கோயில் தீபாவளி திருநாள் அன்று பெருந்திரளான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துவர். தைப்பூச விழாவின் போது பக்தர்கள் மகாமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக பட்டு குகை முருகன் கோயிலுக்கு செல்வது மிகவும் விசேஷமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்து பாரம்பரியப்படி கோயில் புனித படுத்தப்படுகிறது. கோயில் தேவஸ்தான கட்டடத்தை டத்தோ. எஸ். சாமிவேலு திறந்து வைத்தார். கோயில் நிர்வாக தலைவர் ஆர். நடராஜா இந்த கட்டடம் கட்டுவதற்கான எண்ணத்தை வெளியிட்டார். தொடர்ந்து அப்போதைய கோயில் நிர்வாக உறுப்பினராக இருந்த டத்தோ. சாமிவேலுவின் முயற்சியால் கட்டடம் கட்டப்பட்டது.
கட்டடத்தின் 2 தளங்களில் கார் நிறுத்தவும், 3 தளங்களில் இரண்டில் அரங்குகளும், ஒரு மண்டபமும் உள்ளது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
குன்னூர்:நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் செய்கிறது. 2015ம் ஆண்டு வரை, 5,000 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதி செய்ய, ...
மே 22,2013 IST