சுவாமி நாராயண் மந்திர், அட்லாண்டா

செப்டம்பர் 12,2011  IST

Comments

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில், சுவாமிநாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று.
கோயில் அமைப்பு : 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டிட அளவு 22ஆயிரத்து 442 சதுரடி. கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக்கல்லால் ஆனது. தரைத்தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற்பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 டன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 டன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற்துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும்,14
ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலில் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளால் ஆனவை. கீழ்தளம் முழுவதும் ஜெல் டியூபால்
உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபர் ஆப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.


சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும். முழுகட்டமைப்பும் "சிற்ப சாஸ்திர' அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.


ஆலய வரலாறு : 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண் பக்தர்களால், இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988ம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு, அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப்பணிகள் நடத்தப்பட்டது. 2005 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் முடிவு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. 2006ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண் மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாக செயல்படத் துவங்கியது.


ஆலய நேரம் : அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.


முகவரி : BAPS Shri Swaminarayan Mandir

460 Rockbridge Road NW


Lilburn, GA 30047


தொலைப்பேசி : 678.906.2277

இ-மெயில் : info.atlanta@usa.baps.org


பேக்ஸ் : 678.906.2984

இணையதளம் : http://atlanta.baps.org/


மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் கும்பாபிஷேக 3ம் ஆண்டு விழா

நைஜீரியாவில் கும்பாபிஷேக 3ம் ஆண்டு விழா...

கானாவில் தீபாவளிக் கொண்டாட்டம்

கானாவில் தீபாவளிக் கொண்டாட்டம்...

நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளித் திருநாள் விழா

நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளித் திருநாள் விழா...

தான்சானியாவில் ஆரம்பப் பள்ளியின் பட்டமளிப்பு விழா

தான்சானியாவில் ஆரம்பப் பள்ளியின் பட்டமளிப்பு விழா...

Advertisement
Advertisement

சந்திரபாபு நாயுடுவிடம் ஜப்பான் உறுதி

டோக்கியோ: ஆந்திர தலைநகரை நிர்மாணிப்பதில் ஜப்பான் உதவி செய்யும் என உறுதியளித்துள்ளது. ஜப்பான் சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ...

நவம்பர் 29,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)