துபாய் தமிழ் பெண்கள் சங்கம், துபாய்

செப்டம்பர் 22,2011  IST

Comments

துபாய் தமிழ் பெண்கள் சங்கம், 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கமற்ற சமூக மற்றும் கலாச்சார அமைப்பாக செயலாற்றி வரும் இச்சங்கம் துபாயில் உள்ள இந்தியர்கள் நலவாரிய கழகத்துடன்(ஐ.சி.டபிள்யூ.சி.,) இணைந்த அமைப்பாகும். சுமார் 33 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வாழ்ந்த தமிழ் பெண்கள் சிலரால் சிறிய அளவில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. நாள‌டைவில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மட்டுமின்றி இந்திய கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைகளை துபாயில் வளர்ப்பது, இந்திய சமூகத்தினரில் நலனுக்கான சமூகப் பணிகளை மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் திறமைகளை வளர்த்தல், ஊக்குவித்தல், சமூக சேவைகள் உள்ளிட்ட பணிகளால் படிப்படியாக துபாய் தமிழ் பெண்கள் சங்கம் வளர்ச்சி அடையத் துவங்கியது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களை விழாக்களிலும் பங்குபெற வைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயலாற்றி வருகிறது.

பயனுள்ள விவாத நிகழ்ச்சிகள், ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலைப்புக்களின் கீழ் ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட கால அளவில் இச்சங்கம் நடத்தி வருகிறது. சங்க உறுப்பினர்கள், குழந்தைகள் ஆகியோருக்கான வினாடி வினா, ஓவியப் போட்டி, சமையல் போட்டி, ரங்கோலிப் போட்டி, நடன மற்றும் இசைப் போட்டிகள் ஆகியவைகளும் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட விழாக்களின் போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். குஜராத் பூகம்பம் போன்ற தேசிய இடர்பாடுகளுக்கும் துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் சார்பில் நன்கொடைகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட சமூக தொண்டுகள் பலவும் இச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சங்க உறுப்பினர்கள் :

தலைவர் : மீனாகுமாரி பத்மநாதன்

செயலாளர் : காயத்ரி சந்திரசேகர்

பொருளாளர் : உஷா கிருஷ்ணன்

பொழுதுபோக்கு பிரிவு செயலாளர் : சாரதா ஹரி

ஒருங்கிணைப்பாளர்கள் : ராதா தியாகராஜன், ஹேமாமாலினி சுந்தர்

ஆலோசனைக் குழு : மீனாட்சி காந்தி, சுஜாதா சுந்தர்ராஜன்

துபாய் தமிழ் பெண்கள் சங்க இ-மெயில் : tladubai2010@gmail.com

இணையதளம் : http://www.tamilladiesassociationdubai.com/


மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா...

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி...

பிரான்ஸ்வாழ் இந்தியர்கள் பிரச்னை: ஒரு கலந்துரையாடல்

பிரான்ஸ்வாழ் இந்தியர்கள் பிரச்னை: ஒரு கலந்துரையாடல்...

மெல்போர்னில் தமிழ் நாடகம்

மெல்போர்னில் தமிழ் நாடகம்...

Advertisement
Advertisement

கூடங்குளம்: வழக்குகள் வாபஸ்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தொடர்ந்த வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றது. மொத்தமுள்ள 248 வழக்குகளில் 213 வழக்குகள் ...

அக்டோபர் 30,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)