ஆலய தகவல்கள் : தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் தெற்கே அமைந்துள்ளது அருள்மிகு மகா ஜ்வால நரசிம்மர் திருக்கோயில். இக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மகா ஜ்வால நரசிம்மர், அன்பின் முழு வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களாலும், தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களாலும் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதுடன் ஆன்மிக கூட்டங்கள், பிரார்த்தனைகள், பஜனைகள் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது. முக்கிய நாட்களில் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகங்கள், யாகங்கள் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது. ஆத்ம ஞானம், கிரியா சக்தி, தியானம் உள்ளிட்டவைகளை வளர்க்கும் மிகப் பெரிய ஆன்மிகத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. குரு பூர்ணிகா தினங்களில் மகா அவதார் பாபாஜிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலில் பாபாஜிக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பாபாஜியின் பாதசுவடு ஒன்றும் உள்ளது.
ஆலய முகவரி : Sri Maha Jwala Narasimha Temple,
25, Constantia Avenue, Alan Manor,
Johannesburg, South Africa.
தொலைப்பேசி : 072 773 5611
இ-மெயில் : info@narasimha.co.za
இணையதளம் : http://www.narasimha.co.za
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
பார்மெர்:ராஜஸ்தான் மாநிலம் பாமெர் மாவட்டம் சிவானா பகுதியில் ஒரு பழைய வீடு அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்த விழுந்ததில் 8 பேர் ...
மே 20,2013 IST