தலவரலாறு : மலேசியாவின் சுங்கை பெட்டனி பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில், அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் ஆகும். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த தோட்டப் பணியாளர்களாக வாழ்ந்த இந்தியர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. இப்பகுதியில் மிகப் பழமையானதாகவும், மிகப் பெரியதாகவும் கருதப்படும் இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயிலில் காமதேனு வடிவம், பிரம்மாண்ட ஹனுமன் சிலை, கருங்கல்லால் ஆன அழகிய மாரியம்மன் சிலை ஆகியன இக்கோயிலின் தனிச் சிறப்புக்கள் ஆகும். இக்கோயிலின் கருவறையில் அமைந்துள்ள மாரியம்மன் விக்ரஹம், இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
ஆரம்பத்தில் செல்வ செழிப்புடன் காணப்பட்ட இக்கோயில் நாளடைவில் போதிய பராமரிப்பின்றி முற்கள், புதர்கள் ஆகியவற்றால் மூடப்பட்டு போனது. பல ஆண்டுகளால் இக்கோயிலுக்கு ஆட்கள் யாரும் செல்லாமல் மூடப்பட்டு கிடந்தது. இந்நிலையில் இக்கோயிலின் தற்போதைய நிர்வாகக் குழுத் தலைவராக உள்ள ஜெகா என்பவரின் கனவில் சிவப்பு நிற புடவையில் வந்த மாரியம்மன், தனது கோயிலின் நிலை குறித்து எடுத்துக் கூறி, அதனை சரிசெய்யுமாறு கூறி உள்ளார். காடுகளாக சூழப்பட்ட மாரியம்மன் கோயிலை கனவில் கண்டது முதல் ஜெகாவால் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அந்த கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஜெகாவில் ஆழ்மனதில் எண்ணம் தோன்றியது. இதன் காரணமாக ஜெகா, புதர்கள் மண்டிய மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு நிரம்பி இருந்த புதர்கள், குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஜெகா ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக அங்கு வந்த மற்றொருவரும் ஜெகாவிற்கு உதவியாக கோயிலை சுத்தம் செய்ய துவங்கினார். மேலும் ஆலயத்தை புதுப்பிக்க 500 ரிங்கிட்களை ஆலய தலைவர் ஜெகாவிடம் அளித்தார். இதனால் தூண்டப்பட்ட ஜெகா, 1.4 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் சுங்கை பெட்டனி பகுதியில் மிகப் பிரம்மாண்ட, புகழ்பெற்ற ஆலயமாக ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் திகழ துவங்கியது.
ஆலய முகவரி :
Sri Maha Mariamman Temple ,
Taman Keladi, 08000 Sungai Petani, Kedah, Malaysia.
தொலைப்பேசி : 0194582705 (ஜெகா)
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
தூத்துக்குடி:நர்சிங் மாணவியர் விடுதியில், அடிக்கடி, ஆபாச நடனமாடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், அரசு மாணவியர், நர்சிங் ...
மே 19,2013 IST