அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயம், கோலாலம்பூர்

ஜனவரி 13,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பங்சர் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக கருதப்படுவது அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயமாகும். பாம்பு புற்றாக இருந்த இந்த இடம் நாகேஸ்வரி அம்மனின் இருப்பிடம் என 1945ம் ஆண்டு பாம்பாட்டி சித்தரால் அடையாளம் காணப்பட்டது. அன்று முதல் இன்று வரை இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. துவக்கத்தில் ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக ஆலயம் அமைந்துள்ள இடம் தேவைப்பட்டதால், ஆலயம் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் புதிய ஆலயம் அமைப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது. புதிய ஆலய அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு கெட்ட கனவுகள், சிறு சிறு விபத்துக்கள், கண்டறியப்படாத நோய்கள் என வந்த வண்ணம் இருந்தது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் நாகேஸ்வரி அம்மனை தொடர்ந்து வழிபட்ட வண்ணம் இருந்தனர். நாகேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்துவதற்காக விழாவும் எடுக்கப்பட்டது. திருவிழாவின் இறுதி நாளில் காளியம்மன் என்னும் பெயருடைய பெண் ஒருவருக்கு அருள் வந்தது. அவர் கூறிய அருள்வாக்கில் நாகேஸ்வரி அம்மனின் ஆலயம் பழைய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், அதே சமயம் புதிய ஆலயத்தில் மாலை நேர பூஜைகள் மட்டும் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஆலயத்தில் மையப் பகுதியில் மிகப் பெரிய பாம்பு புற்று ஒன்று தானாக உருவானது. இந்த புற்றில் 2 நல்ல பாம்புகள் வசித்து வருகின்றன. இவைகள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே வெளியே வருகின்றன. அது தவிர பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் காலங்களிலும் இவைகள் புற்றிலிருந்து வெளியே வருகின்றன. இவைகள் தவிர வெண்ணிற நல்ல பாம்பு ஒன்றும் ஆலயத்திற்கு காவலாக இருந்து வருகிறது. ஒருசமயம் இவ்வாலயத்தில் கொள்ளை அடிப்பதற்காக கொள்ளை கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததும் வெண்ணிற நல்லபாம்பு, கருவறைக்கு முன் நின்று கொள்ளையர்களை பார்த்து கோபத்துடன் சீறியது. கொள்ளையடிக்க வந்தவர்களின் உடல்கள் செயலிழந்தன. கலக்கம் அடைந்த கொள்ளையர்களின் மனைவிகள் நாகேஸ்வரி அம்மனை தேடி வந்து மனம் உருகி வேண்டிக் கொண்டனர். உடனடியாக பாதிக்கப்பட்ட கொள்ளையர்கள் குணமடைந்தனர். மனம் திருந்திய அவர்கள் தற்போது இந்த சக்தி வாய்ந்த ஆலயத்தின் தொண்டர்களாக மாறி சேவை செய்து வருகின்றனர்.

சிறப்புக்களும் முக்கிய விழாக்களும் : நாகதோஷ பரகார தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. ஜாதகத்தில் ராகு-கேது திசை உள்ளவர்களும் இவ்வாலயத்தில் வந்து பரிகார பூஜை செய்து, நாகேஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். தோஷ நிவர்த்திக்காக இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே அதிகளவில் வருகின்றனர். தொடர்ந்து 27 வாரங்கள் இவ்வாலயத்தில் பூஜை செய்தால், தோஷங்கள் அனைத்தும் விலகி, நன்மைகள் நடைபெறுவதாக ஐதீகம். இதனை பலரும் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளனர். ஆடி மாதம் இவ்வாலயத்தில் முக்கிய திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர தினத்தன்று தீமிதித்திருவிழா மிகப் பிரம்மாண்டமாக ‌நடத்தப்படுகிறது. பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

ஆலய முகவரி : Sri Nageswary Amman Temple,

Jln Lengkok Abdullah, Off Jln Bangsar,


59000 Kuala Lumpur, Malaysia.


தொலைப்பேசி : 03-22820635.


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018

ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018...

அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...

துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...

Advertisement
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

மேட்டூர்: கோடை மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த கோடை மழையால், 23ல், 603 கன ...

மே 27,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)