அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், சுங்கை பெட்டனி, மலேசியா

பிப்ரவரி 03,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசியாவின் சுங்கை பெட்டனி பகுதியில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலாகும். 1960 களுக்கு பின்னரே இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இவ்வாலயத்தின் தலைவராக இருக்கும் வேலு, தனது இளம் பருவத்தில் சிறிய சன்னதியாக இருந்த இக்கோயிலில் நாள்தோறும் வழிபாடு நடத்தி வந்தார். தன்னை முழுவதுமாக விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணித்தவராக வாழ்க்கை நடத்தி வந்தார். அந்நிலையில், அனைத்து மனிதர்களின் வாழ்க்கையில் வரும் சோதனை காலத்தை வேலுவும் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராத சூழ்நிலை காரணமாக வேலு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடும்பத்தை பிரிந்து, சிறையில் தனிமையில் தவித்து வந்‌த வேலு, சதாசர்வ காலமும் விநாயகரையே வழிபட்டு வந்தார். தனது தனிமையை மறக்க சிறையில் வேதங்கள், பூஜைகள், யோகா ஆகியவற்றை வேலு கற்றுக் கொள்ளத் துவங்கினார். சில மாதங்கள் கழித்து வேலு ஒரு அற்புத கனவு ஒன்றை கண்டார். அதில் விநாயகப் பெருமான் பளபளக்கு வெண்ணிற ஒளியுடன் தோன்றி, சிறிய நிலம் ஒன்றை வாங்கும் படியும், அதனை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் படியும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வேலு தனது மனைவியிடம் ஒரு சிறு நிலத்தை வாங்கி, அதுனை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி தெரிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற முதல் விசாரணையில் வேலுவிற்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் அளவு கடந்த சந்தோஷத்தில் மூழ்கிய வேலு, விநாயகரின் அருளை பெற கோயிலுக்கு ஓடி வந்தார். தனது இஷ்ட தெய்வத்தின் அருளை சொல்ல வார்த்தையற்றவராக ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் மிக விரைவிலேயே விநாயகரின் கருணையால் வேலு அவ்வழக்கில் இருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டார்.

1971 ம் ஆண்டு 2வது முறையாக அதிசய கனவு ஒன்றை கண்டார். அந்த கனவில் லக்ஷ்மி தேவி தனது உள்ளங்கையில் இருந்து தங்க காசுகள் கொட்டுவதாக அமர்ந்திருப்பதாகவும், அந்த சன்னதியை 12 பூதகனங்கள் காத்து நிற்பதாகவும் கண்டார். கண்விழித்த வேலு, விநாயகருக்கு புதிய கோயில் கட்ட வேண்டும் என தீர்மானித்து, அதற்கான பணிகளில் இறங்கினார். இக்கோயிலில் 16 வடிவங்களில் விநாயகப் பெருமான் காட்சி கொடுப்பது போன்று அமைத்தார். இந்த தனிச்சிறப்பின் காரணமாக இக்கோயில் மக்களிடையே புகழ் பெறத் துவங்கியது. நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்க துவங்கியது. சில ஆண்டுகளுக்கு பின்னர், சீன வணிகர் ஒருவர் இக்கோயிலுக்கு தேக்கு மரத்தால் செதுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான யானை ஒன்றை நன்கொடையாக வழங்கினார். அன்று இரவு முழுவதும் அந்த வணிகர் தூங்கவில்லை. யானைகளின் காலடி ஓசையால் உறக்கமின்றி தவித்தார். இவ்வாலயத்தில் உள்ள விநாயகர் வழிபட்டு, அதற்கு தீர்வும் கண்டார். தற்போது இந்த தேக்கு மரத்தால் ஆன யானை உருவம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பாக விளங்குவது இக்கோயிலில் உள்ள மிகப் பெரிய வெள்ளி ரதம் ஆகும். மலேசியாவின் மிகப் பெரிய தேராக கருதப்படும் இந்த தேர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளாக் காட்சி நடைபெறுகிறது. இந்த தேரின் எடை 5 டன்னாகும். தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களைக் கொண்டு கலைநுணுக்கங்களுடன் செய்யப்பட்டுள்ள இந்த தேருக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளி கட்டிகள் சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆலய முகவரி : Sri Sithi Vinayagar Temple,

Jln Hospital, 08000 Sungai Petani,


Kedah, Malaysia.


தொலைப்பேசி : 04-4216892


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்...

சிங்கப்பூரில் கதைக் களம்

சிங்கப்பூரில் கதைக் களம்...

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி ...

குவைத்தில் குழந்தைகள் தின விழா

குவைத்தில் குழந்தைகள் தின விழா...

Advertisement
Advertisement

நெல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

நெல்லை : நெல்லை மாவட்டம் மேலபாட்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஆறுமுகநாயனார்(38) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ...

நவம்பர் 24,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)