ஆலய வரலாறு : மலேசியாவின் பெனாங் பகுதியில் அமைந்துள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், செட்டியார் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டதாகும். நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம் என பக்தர்களால் அழைக்கப்படும் இவ்வாலயம் தண்டாயுதபாணி ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. வாட்டர்ஃபால் ரோடு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் திருப்பணிகள் 1854ம் ஆண்டு துவங்கப்பட்டது. செட்டியார் சமூகத்தினரால் சிறிய அளவிலான நிலம் இப்பகுதியில் கோயில் அமைப்பதற்காக பெறப்பட்டுள்ளது. செட்டியார்களின் பாரம்பரிய முறைப்படி, கோட்டை அமைப்பிலான கோயிலாக இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. செட்டியார் சமூகத்தாரின் நன்கொடையால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலில் தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் திருப்பணிகள் 1857ம் ஆண்டு முடிவடைந்து, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் தைப்பூச திருநாளன்று செட்டியார் சமூகத்தினர், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தை நகர வீதிகளில் 3 நாட்கள் இழுத்து வருகின்றனர். இவ்விழா, ஆலயத்தின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
ஆலய முகவரி : Nattukkottai Chettiar Thendayuthapani Temple,
Jalan Kebun Bunga, George Town, Malaysia.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
சென்னை: தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். ...
மே 19,2013 IST