ஆலய குறிப்பு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மிக அழகிய ஆலயம் அருள்மிகு மகா காளியம்மன் ஆலயம் ஆகும். இக்கோயில் குயில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. கோலாலம்பூரின் மையப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. பட்டு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கிய தெய்வமாக காளியம்மன் வீற்றிருக்கிறாள். காளியம்மன் தவிர விநாயகர், முருகன், மதுரை வீரன் உள்ளி்ட்ட தெய்வங்களுக்கும் முறையே தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நவகிரக மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவனவும் அமைந்துள்ளன. Lot 1261 Jalan Ismail Ghaney,Kampung Kasipillay, 51200 Kuala Lumpur, Malaysia. தொலைப்பேசி : +60 3 40448687
ஆலய நேரங்கள் : காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறந்துள்ளது.
ஆலய முகவரி : Kuil Sri Maha Kaliamman Temple,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
பார்மெர்:ராஜஸ்தான் மாநிலம் பாமெர் மாவட்டம் சிவானா பகுதியில் ஒரு பழைய வீடு அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்த விழுந்ததில் 8 பேர் ...
மே 20,2013 IST