ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 2004ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. தொன்மையான தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் மேற்கொள்வதற்காகவும், தமிழ் கல்வியை ஊக்குவிப்பதற்காக இப்பகுதி தமிழ் மக்கள் இம்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தமிழ் ஆய்வு மையத்தின் கிளை நிறுவனமாக வள்ளுவர் கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. தமிழ் கலைகள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை மேம்படுத்தும் தளமாக இவைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ் மொழியின் வளத்தையும் அதன் தொன்மை மற்றும் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்துவருகின்ற லாப நோக்கற்ற ஒரு பொது சேவை செய்யும் அமைப்பே மெல்பேர்ன் மாநகரில் உள்ள ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையம். இவ்வாய்வுமையம், வள்ளுவர் கலைக்கூடத்தின் வழியாக இளம் கலைஞர்களை ஊக்குவித்து, தமிழ் கலை, இலக்கிய பண்பாட்டு சிறப்புகளை, இயல் இசை நாடகவடிவில் அனைவரின் மனம் கவரும் வண்ணம் செயலாற்றி வருகிறது.
ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையத்தின் தகவல் தொடர்புக்கு:
மின்னஞ்சல் : tamilrca@gmail.com
இணையதளம் : www.tamilresearch.org
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்தி
சென்னை: தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். ...
மே 19,2013 IST