ஆலய வரலாறு : ஜெர்மனியில் சார்லாந்து பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயம் ஆகும். ஆல்டன்வால்ட் என்னும் சிறிய கிராமத்தில், பழைய தங்கும் விடுதிக்கு பின்புறம் அமைந்துள்ளது, அன்னை மகாமாரியம்மன் வீற்றிருக்கும் இந்த ஆலயம். ஜெர்மனியில் முதன் முதலில் கட்டப்பட்ட இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் தென்மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்து ஆலயமும் இதுவே ஆகும். ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், 1994ம் ஆண்டு சோமசுந்தரம் அரவிந்த்கோஷ் என்பவரால் கட்டப்பட்டதாகும். அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த இந்துக்கள் கூடும் இடமாக இவ்வாலம் திகழ்ந்தது. மேலும் குழந்தைகள் தமிழ், தமிழ் கலாச்சாரம், இந்து சமயம் ஆகியன குறித்து கற்பிக்கும் இடமாகவும் இவ்வாலயம் விளங்கியது.
பிரான்சில் உள்ள கிராமங்கள், பாடன்-வ்யூடெம்பெர்க், ரினிலாந்து-பாலடினேட் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து, வழிபட்டு, மகாமாரியம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர். இக்கோயிலின் அனைத்துப் பணிகளும் பக்தர்கள் அளித்த நன்கொடைகள் மற்றும் நிதி வசூலின் மூலமே மேற்கொள்ளப்பட்டதாகும். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக இக்கோயில் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
ஆல்டன்வால்ட் பகுதி ஸ்ரீ மகா மாரியம்மன், லேசாக புன்னகையித்தபடி, புடவை, மலர்களுடனான நகைகள் அணிந்து அமர்ந்த நிலையில் தனியான பெரிய சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை பக்தர்கள் தங்களின் தாயாக கருதி வழிபடுகின்றனர். தன்னை நம்பி வந்து வழிபடுபவர்களுக்கு இன்பம், ஆரோக்கியம், வளம் உள்ளிட்டவைகளை அளித்து இக்கட்டான நிலைகளில் பக்தர்களை மகாமாரியம்மன் காப்பாற்றுகிறாள் என்பது மக்களின் நம்பிக்கை. கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைவதற்கு இக்கோயிலில் வந்து வழிபட்டு செல்கின்றனர். பக்தர்களை காப்பதற்காக மகாமாரியம்மன் ஏராளமான அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.
ஆலய நேரங்கள் : திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri Mahamariamman Tempel Saar,
Grubenstraße 41, D – 66280 Altenwald (Saar), Germany
தொலைப்பேசி : 06897 – 81112
இ-மெயில் : info@ammantempel.de
இணையதளம் : http://ammantempel.de/en/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
தற்போதைய செய்திலண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனை அடுத்த உல்விச் பகுதியில் மர்மநபர்களால், ராணுவ வீரர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
மே 22,2013 IST