அருள்மிகு சிவசுப்ரமணியர் ஆலயம், சூரிச் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு சிவசுப்ரமணியர் ஆலயம், சூரிச்

பிப்ரவரி 28,2012  IST

Comments

ஆலய வரலாறு : சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள அட்லிஸ்வில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்ரமணியர் ஆலயம், 1994ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். துவக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேர பூஜைகள் மட்டுமே இவ்வாலயத்தில் நடைபெற்று வந்தன. 2000ம் ஆண்டில் ஆலயத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிவன், முருகன், மகா கணபதி, துர்க்கை அம்மன், ராஜராஜேஸ்வரி அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களின் ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டது. அத‌ன் பிறகு கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் பெருகத் துவங்கியது. அதுன் பின்னர் தினசரி பூஜைகள் மாலை 7.30 மணிக்கு நடைபெற துவங்கின. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை, பகல் மற்றும் மாலை என மூன்று கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. பகல் பொழுதில் நடத்தப்படும் உச்சிகால பூஜை மற்றும் மாலை பூஜைகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
முக்கிய விழாக்கள் : நவராத்திரி, கந்தசஷ்டி திருவிழா, கெளரி காப்பு, திருவெம்பாவை பூஜை ஆகிய விழாக்கள் இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும் கும்பாபிஷேக தின விழா ஆண்டு திருவிழாவாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா 10 முதல் 12 நாட்கள் வரை ந‌டத்தப்படுகிறது. ஆண்டு திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் இவ்வாலயத்தில் கலந்து கொள்கின்றனர்.
ஆலய நேரம் : தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.
ஆலய முகவரி : Sri Sivasubramaniar Tempel,

Sihlweg-3, Postfach


8134 Adliswil ZH, Swiss.


தொலைப்பேசி : 044 709 06 30

பேக்ஸ் : 044 771 13 34

இமெயில் : murugantempel@gmail.com

இணையதளம் : http://www.murugantemple-zh.ch/index.html


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

பஹ்ரைன் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்...

ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா

ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா...

ஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி...

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)