என்ஃபீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம்,லண்டன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

என்ஃபீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம்,லண்டன்

பிப்ரவரி 28,2012  IST

Comments

ஆலய வரலாறு : இந்து தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து வந்து ஐரோப்பாவில் குடியேறிய தமிழ் சமூகத்தினருக்கு உதவுவதற்காகவும் இந்து தமிழ் கலாச்சார அமைப்பு லண்டனின் என்ஃபீல்ட் பகுதியில் அமைக்கப்பட்டது. இச்சமூகத்தினரின் வழிபாட்டிற்காக 2002ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் அமைக்கப்பட்டது. சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் மற்றும் சிவஸ்ரீ கமலானந்த குருக்கள் ஆகியோரால் விநாயகர், நாகபூஷணி அம்மன், வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆகியோரின் திருவுருவ படங்களுடன் பூஜைகள் முறைப்படி துவங்கி வைக்கப்பட்டன. இதன்பின்னர் கமலானந்த கருக்கள் ஆலயத்தின் தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். துவக்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் எட்மோன்டன் பகுதியில் உள்ள அரங்கில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.அதன் பின்னர் 2002ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெண்கலத்தால் ஆன நாகபூஷணி அம்மன் சிலை பிரிஷ்டை செய்யப்பட்டது.


தொழில்கூடங்கள் நிறைந்த பகுதியாக இருந்த என்மோன்டன் பகுதி சொந்தமாக பெறப்பட்டு, ஆலயமாக மாற்றம் செய்யப்பட்டது. ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் சீறிய முயற்சி மற்றும் அயராத உழைப்பின் காரணமாக 20 நாட்களுக்குள் ஆலய உருவாக்கப்பட்டது. பக்தர்களின் நன்கொடை இதற்கு பேருதவியாக அமைந்தது. 2003ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று விநாயகர், நாகபூஷணி அம்மன், சிவலிங்கம், வள்ளி தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், தேவர், வைரவர் ஆகிய தெய்வங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது இவ்வாலயம் சிறந்த கலாச்சார அமைப்பாகவும், வழிபாட்டு தலமாகவும் விளங்குகிறது. கமலானந்த குருக்களுடன் இணைந்து உமேந்திர குருக்களும் ஆலய பணிகளை நிர்வகித்து வருகின்றனர்.


ஆலய நேரம் : திங்கம், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9.15 வரையிலும், செவ்வாய்கிழமைகளில் காலை 6.30 மணி முதல் இரவு 9.15 வரையிலும் ஆலயம் வைக்கப்படுகிறது.

ஆலய முகவரி : ENFIELD NAGAPOOSHANI AMBAAL TEMPLE,

61–65 Church Lane Edmonton, London N9 9PZ .


தொலைப்பேசி : 0208 884 3333

இமெயில் : info@ambaal.org

இணையதளம் : www.ambaal.org


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா...

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)