இங்கிலாந்தில் ஒளிர் விடும் வடஇந்திய கிருஷ்ணர் கோயில்

ஜூன் 05,2008  IST

Comments

தலவரலாறு: இங்கிலாந்தின் பிரிஸ்டன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் குஜராத் இந்து சமூகத்தாரால் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் கோயிலாகும். இக்கோயில் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி துவங்கப்பட்டதாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வம் கிருஷ்ணர் ஆவார். குஜராத் சமுதாயத்தாரால் இங்கிலாந்தில் துவங்கப்பட்ட மூன்றாவது வழிபாட்டுத்தலம் இதுவாகும். இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கோயிலின் திறப்பு விழாவில் இங்கிலாந்து முழுவதிலும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வர். சமூகத்தாரின் தேவைக்காக இக்கோயில் இரண்டு பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. ஒன்று வழிபாட்டிற்காகவும் மற்றொரு பகுதி கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இருமுறை பயன்பாட்டு கட்டிடம் ஆன்மிக மற்றும் கலாச்சார மேம்பாடுகளை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. 1975-ம் ஆண்டு இக்கோயிலுக்கான அனுமதி பெறப்பட்டு செயல்படத் துவங்கியது. 1978-ம் ஆண்டு நிதி திரட்டப்பட்டு இக்கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டன. இதில் பல தொண்டு நிறுவனங்களும், கலாச்சார மையங்களும் உள்ளார்ந்து உதவி புரிந்தன. இந்த நிதிகளைக் கொண்டு இக்கோயிலின் வளர்ச்சிப் பணிகள் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. அத்துடன் பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் அமைக்கப்பட்டன.

முக்கிய விழாக்கள்: தீபாவளி, பாய்-பீஜ், மகாசிவராத்திரி,ராமநவமி, ஹோலி, கிருஷ்ண ஜெயந்தி, ரக்ஷா பந்தன், நவராத்திரி, அனகுட் போன்ற வட இந்திய பண்டிகைகள் இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் முகவரி :

GHS, South Meadow Lane,

Preston PR1 8JN,

England.

இணையதள முகவரி :  www.ghspreston.co.uk

மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014

துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014...

அமெரிக்கா, ரிச்மாண்டில் நவராத்திரி

அமெரிக்கா, ரிச்மாண்டில் நவராத்திரி...

ஜாம்பியாவில் நவராத்திரி

ஜாம்பியாவில் நவராத்திரி...

சிங்கப்பூரில் ரத்த தான முகாம்

சிங்கப்பூரில் ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

பாசனத்திற்காக மஞ்சளாறு அணை திறப்பு

தேவதானப்பட்டி: தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக மஞ்சளாறு அணை இன்று திறக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணை இன்று பாசனத்திகாக ...

அக்டோபர் 23,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us