அமெரிக்காவிலுள்ள அற்புத சத்யநாராயணர் ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவிலுள்ள அற்புத சத்யநாராயணர் ஆலயம்

ஜூன் 05,2008  IST

Comments

தலவரலாறு: 1979-ம் ஆண்டு துவங்கப்பட்ட கனக்டிக்கட் வேலி இந்து சமயக்கோயில் ஓர் லாப நோக்கமற்ற நிறுவனமாகும். இது வட அமெரிக்காவிலுள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இந்துக்களுக்கென வழிபாட்டுத்தலம் அமைப்பது, இந்துக்களின் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை தொடர்ந்து நடத்துவது, சமய மற்றும் தெய்வீக கொள்கைகளை வளர்ப்பது, இந்திய மொழிகள் மற்றும் கலைகளை ஓங்கச் செய்வது, இளைய சமுதாயத்திடம் இந்துக் கலாச்சாரத்தை வளர்ப்பது, பல்வேறு சமூக தொண்டாற்றுவது ஆகியன இக்கோயிலின் முக்கிய நோக்கங்களாகும். இதனால் இதன் புகழ் வட அமெரிக்காவை தாண்டியும் பரவி இருந்தது. இது போன்ற முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரு கலாச்சார நிறுவனமாகவும் செயல்படத் துவங்கியது. 1980-ம் ஆண்டு முதல் இக்கோயிலில் பூஜைகள் மற்றும் விழாக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு இக்கோயிலுக்கான அர்ச்சகர் நியமிக்கப்பட்டு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இக்கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா போன்ற கலாச்சார விழாக்களும் திருமண வைபவங்களும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 1978-ம் ஆண்டு இக்கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கென மிகப் பிரம்மாண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வெங்கடேஷ்வர ஆலயத்தின் பிரத்யேக வாயில் வைகுண்ட ஏகாதேசி போன்ற நாட்களின் போது மக்கள் உபயோகத்திற்கென திறக்கப்படுகிறது. இக்கோயில் இந்தியாவிலுள்ள திருப்பதி வெங்கடேஷ்வரர் ஆலயத்தைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயில் கட்டுவதற்கென தீவிர எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பொருளாதார நெருக்கடிகளாலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இக்கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில், முன்பிருந்த தேவாலயத்தை விரிவுபடுத்த அதன் நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்து கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துக்களின் நெடுநாளைய கோரிக்கையின் பேரில் இந்துக்கள் கூடி பேசி அப்பகுதியில் சத்யநாராயணர் கோயில் கட்டமுடிவு செய்யப்பட்டது. அவருடன் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரர் ஆகிய முப்பெரும் தேவர்களின் சன்னதிகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின் அனுமதி பெறப்பட்டு புதிய நிலத்தில் பண்பாட்டின் வடிவமாக சத்யநாராயணர் கோயில் கட்டப்பட்டது. 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இக்கோயில் கட்டுவதற்கான முதல் கூட்டம் நடத்தப்பட்டது. 1980---ம் ஆண்டு முதல் இக்கோயிலில் தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் இக்கோயிலில் மகர சங்கராந்தி/விவேகானந்தர் ஜெயந்தி, சரஸ்வதி பூஜை,மகாசிவராத்திரி, ராமநவமி,கிருஷ்ண ஜெயந்தி, துர்க்கா பூஜை, விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டன. பிறகு 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு அழகிய கோயில் எழுப்ப திட்டமிடப்பட்டது. அப்புதிய கோயிலில் கல்யாண மண்டபம், நூலகம், சேமிப்பு கிடங்கு, தியான கூடம் ஆகியனவும் அமைக்கப்பட்டன.1980-ம் ஆண்டின் இறுதியில் இருந்து இக்கோயில் செயல்படத் துவங்கியது.

கோயில் முகவரி :

Sri Satyanarayana Temple

11 Training Hill Rd, Middletown,

CT 06457

தொலைப்பேசி : 860-346-8675

இணையதள முகவரி : www.cvhts.org

இ-மெயில் : ContactCVHTS@cvhts.orgAdvertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018

ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா-2018...

அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

அஜ்மானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...

துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு...

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...

Advertisement
Advertisement

கருக்கலைப்பு சட்டத்தை மாற்ற ஆதரவு

டப்ளின்: கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அயர்லாந்து மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

அயர்லாந்தில், தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ...

மே 27,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)