வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்வு

ஏப்ரல் 27,2012  IST

Comments

வட அமெரிக்காவில் உள்ள ஐக்கிய அமெரிக்கா மாகாணங்கள் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, கடந்த 25 ஆண்டுகளாக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இப்பேரவையானது இந்த ஆண்டின் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவை கொண்டாடவிருக்கிறது. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக, தேர்தல் அலுவலர் சிவானந்தம் மாரியப்பன்(மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) மேற்பார்வையில் இடம் பெற்றன. இத்தேர்தலில், கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்தார்.


தலைவர்: முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் - சார்ள்சுடன் - தென் கரோலினா)


துணைத் தலைவர்: பீட்டர் யெரோணிமூஸ்
(வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் - வாஷிங்டன் டி.சி.)


செயலாளர்: மெளன.மணிவாசகம்
(தென்-மத்திய தமிழ்ச் சங்கம் - மெம்ஃபிசு - டென்னசி)

துணைச்செயலாளர்: செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் - வட கரோலினா)



பொருளாளர்: தங்கமணி பாலுச்சாமி

(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் - அட்லாண்டா - ஜார்ஜியா)


இயக்குநர் 1: கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் - க்யூசுடன் - டெக்சஸ்)



இயக்குநர் 2: யோபு டேனியல்

(மிசெளரி தமிழ்ச் சங்கம் - செயிண்ட் லூயிசு - மிசெளரி)


இயக்குநர் 3: பிரகல்
(கனடியத் தமிழர் பேரவை - கனடா)



இயக்குநர் 4: சாரங்கபாணி குகபாலன்

(இலங்கை தமிழ்ச் சங்கம் - அமெரிக்கா)


தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் தலைவர் க.தில்லைக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
- தினமலர் வாசகர் டேவிட் பூபாலப்பிள்ளை


மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அபுதாபியில் வௌிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கு

அபுதாபியில் வௌிநாடுவாழ் இந்தியர்களுக்கான கருத்தரங்கு...

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா

சிங்கப்பூரில் மகாகவி பாரதியார் விழா...

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை ஆண்டுவிழா

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை ஆண்டுவிழா...

டென்மார்க்கில் விநாயகர் தேர்த்திருவிழா

டென்மார்க்கில் விநாயகர் தேர்த்திருவிழா...

Advertisement
Advertisement

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் தங்டார் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், 4 ...

செப்டம்பர் 20,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us