மலேசிய மண்ணில் இலங்கை முறைப்படி அமைந்த கந்தசாமித் திருக்கோயில்

ஜூன் 05,2008  IST

Comments

தலவரலாறு: மலேசியாவின் கோலாலம்பூரில் லோங் ஸ்காட் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும்.தமிழர்கள் அதிக அளவில் வசித்த இலங்கையின் ஜாப்னா பகுதியில் 1620 மற்றும் 1685-ம் ஆண்டின் பிற்பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியால் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகளவில் காணப்பட்டது. 1795-லிருந்து 1850-ம் ஆண்டு வரை பிரிட்டீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஜாப்னாவில் ஆங்கிலம் மற்றும் தமிழுடன் ஜாப்னா மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது. இதற்கான பள்ளி மற்றும் கல்லூரிகளைக் கொண்டு 1874-ம் ஆண்டில் சாலை அமைத்தல், ரயில்வே,பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் மலேயா கடற்கரை பகுதிகள் மேம்படுத்தப்பட்டது. திறமை வாய்ந்த அலுவலர்களைக் கொண்டு பிரிட்டீசார் தங்களின் அரசை விரிவுபடுத்த எண்ணியதால், தனது அண்டை நாடான இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்தது மலேசிய அரசு. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தங்கள் வசம் அனுப்ப மலேசிய அரசு விடுத்த கோரிக்கையால் அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலேசியாவின் ரயில்வே துறை நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் கோலாலம்பூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். மலேசிய அரசு அவர்களுக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறத்தாலான கட்டிடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இவ்விரண்டு இடங்களிலும் வாழ்ந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கென ஓர் இயக்கம் அமைத்து அதன் இப்பகுதியில் கோயில் ஒன்றை எழுப்ப முடிவு செய்தனர். மலேசியாவின் பிர்க்பீல்டு பகுதியில் அதிகளவில் வாழ்ந்த ரயில்வே ஊழியர்கள், ஸ்ரீ ஆறுமுக நாவலரின் பின்னோடியான சைவ சித்தாந்த ஆசிரியர் சிவபாதசுந்தரனாரின் வழிகாட்டுதலின் பேரில் ஆகமவிதிப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இப்பகுதியில் சைவ சித்தாந்த முறைகளின்படி விரதம்,திதிகள், புண்ணியகவசம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் 1890-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மலேசிய உயரதிகாரியின் தலைமையில் அப்பகுதியில் சுப்ரமணியருக்கு என்று தனியான நிலம் பெற்று கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1901-ம் ஆண்டு சிலெங்கார் பகுதி இலங்கை தமிழர் இயக்கத்தினரால் ஜெலன் ஸ்காட் பகுதிக்கும் கிளாங் நதிக்கும் இடையே அமைந்த நிலம் பெறப்பட்டது. 1902-ம் ஆண்டு இக்கோயிலின் கட்டிடப் பணிகள் தவங்கப்பட்டது. 1903-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இக்கோயிலுக்கான நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோபுரத்துடனான சிறிய ஆலயமாக 1909-ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அருள்மிகு கந்தசாமி கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1909-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதியன்று நடத்தப்பட்டது.

கோயில் நேரம் : காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும் நேரங்களாகும். இக்கோயிலில் காலை 7 மணி, பகல் 12 மணி மற்றும் மாலை 6.30 மணி ஆகிய வேளைகளின் போது தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை சமய வகுப்புக்களும், வெள்ளிக்கிழமைகளில் பஜனை வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.

முக்கிய விழாக்கள் : 11 நாட்கள் நடத்தப்படும் மஹோற்சவம், 7 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா, 15 நாட்கள் நடைபெறும் கதிர்காம கொடியேற்றம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் முகவரி :

Sri Kandaswamy Kovil,

No.3, Lorong Scott, Brickfields,

50470 Kuala Lumpur, Malaysia

தொலைப்பேசி : (6)03-2274 2987

பேக்ஸ் : (6)03-2274 0288

இணையதள முகவரி: enquiries@srikandaswamykovil.org

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை

பிரிஸ்பேனில் ஐயப்ப மண்டப பூஜை...

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்

3 இந்திய பிரதமர்களின் வரவேற்பில் நடனமாடிய பரதநாட்டிய கலைஞர்...

சிங்கப்பூரில் கதைக் களம்

சிங்கப்பூரில் கதைக் களம்...

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி

துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி ...

Advertisement
Advertisement

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் எழுதி உள்ள கடிதத்தில், 'இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 மீனவர்களையும், அவர்களின் 78 படகுகளையும் ...

நவம்பர் 24,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us