ஜூன் 06,2008 IST
தலவரலாறு : கனடாவின் டொரண்டோ பகுதியில் அமைந்துள்ளது முற்றிலும் தமிழர் முறைப்படி அமைந்துள்ள நாகம்மாள் ஆலயம். லாப நோக்கமின்றி உருவாக்கப்பட்ட இவ்வாலயம் 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி துவங்கப்பட்டது. கனடாவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் நயினாதீவு நாகம்மாள் ஆலயம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. 1998-ம் ஆண்டின் பிற்பகுதியில் இவ்வியக்கம் துவங்குவதற்கான உறுப்பினர்களுக்காக டொரன்டோவிலுள்ள தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு பல கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. கடைசியாக கனடாவில் வாழ்ந்த இந்து-சைவர்கள் 21 பேர் ஒன்றிணைந்து ஆயிரம் டாலர்கள் முதலீட்டில் இந்நிறுவனத்தை துவங்கினர். இவர்களில் பெரும்பாலானவர்களின் சொந்த ஊர் நயினாதீவு ஆகும். அவர்களில் இருவர் நயினாதீவிலுள்ள நாகபூஷணி அம்மன் கோயிலின் நிர்வாக உறுப்பினர்களாவர். இவர்களின் மேற்பார்வையிலேயே கனடாவிலுள்ள நயினாதீவு நாகம்மாள் கோயிலும் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டி முடிப்பதற்கு சுமார் 7 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி நடத்தப்பட்டது. இக்கோயில் கட்டுவதற்கான நிதி அனைத்தும் டொரண்டோவிலுள்ள தமிழ் சைவர்கள் மற்றும் இலங்கை தமிழர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது.
கோயில் முகவரி : 1539 Warden Avenue, Scarborough, Ontario, M1R 4Z8
இணையதள முகவரி: http://nainativu.org/contact.html
ஜூன் 19,2013 IST