தலவரலாறு : நியூஜெர்சியின் மோர்கன்வில்லி பகுதியில் பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அறிபுதமான ஆலயம், அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயிலாகும். 2008ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இக்கோயிலின் பூமி பூஜை இடப்பட்டது. இந்த பூஜையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் கட்டுவதற்கான பணியாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர். கோயிலுக்கென தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர்கள் முன்னிலையில் அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில் கட்டும் பணிகள் துவங்கியது. Sri Guruvaayoorappan Temple (Sri Krishnaji Mandir), 31 Wooleytown Road. Morganville, NJ 07751 தொலைப்பேசி : (732) 972-5552 இ-மெயில் : devotees@hatcc.org இணையதளம் : http://www.krishnatemple.org
குருவாயூரப்பன் கோயிலின் முக்கிய தெய்வமாக ஸ்ரீ கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். சுமார் 33 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பில் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் குருவாயூரப்பன் சன்னதி மட்டுமின்றி சிவன், ஐயப்பன், பாலாஜி(விஷ்ணு), சத்யநாராயணர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதியும் அமைந்துள்ளது.
ஆலய நேரம் : காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Hindu American Temple and Cultural Center,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
சென்னை:-பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், 58 மையங்களில், கடந்த, 4ம் தேதி முதல் சனிக் கிழமை ...
மே 20,2013 IST