தோற்றம் : சிங்கப்பூரில் வசித்த தமிழகத்தின் கரம்பக்குடியை சுற்றி உள்ள சுமார் 40 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி 1900ம் ஆண்டின் மத்தியில் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சி கழகத்தை உருவாக்கினர். இந்த அமைப்பு கரம்பக்குடி திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சி கழகம் என அவர்களால் அழைக்கப்பட்டது. சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு முதலில் தற்காலிக கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. திருக்குறளின் பெருமையை உணர்த்துவதற்காக 1949ம் ஆண்டு இந்த அமைப்பால் நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. துவக்கத்தில் சங்க உறுப்பினர்களிடையே இருந்த மதுப்பழக்கத்திற்கு எதிராக துவங்கிய பிரசாரம் காரணமாக டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை அனைவரிடமும் ஊக்குவிப்பதற்காக திருக்குறள், கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட போட்டிகள் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டது. அனைத்து தமிழர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பு 1940ம் ஆண்டு தனது முதல் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடியது. திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சி கழகத்தில் அனைத்து மதத்தினரும் உறுப்பினர்களாக இருப்பதுடன், அனைத்து விழாக்களையும், பண்டிகைகளையும் இணைந்து கொண்டாடி வருவது இதன் சிறப்பம்சமாகும். பொங்கல், இசை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி ஆகியன பெரிய அளவில் நடத்தப்படுவதுடன் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசும், புத்தகங்களும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
தமிழ்வேள் ஜி.சாரங்கபாணி தலைமையிலான குழுவினரின் சீறிய முயற்சியால் இக்கழகம் மெல்லமெல்ல வளர்ச்சி பெறத் துவங்கியது. நிதிகள் பல பெறப்பட்டு வளர்ச்சி கண்ட இக்கழகம் 1952ம் ஆண்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டது. பல்வேறு புதிய தமிழ் அமைப்புக்களின் தோற்றத்தால் சில சமயங்களில் இக்கழகம் செயலாற்ற முடியாமல் இருந்தது. இருப்பினும் கழகத்தின் வழக்கமான பணிகள் செயல்பட்டு வந்தது. மிகக் குறுகிய அளவிலேயே இக்கழகம் புகழ்பெற்றுள்ளதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களிடையே முதன்நிலை தொடர்பு ஊடகமாக தமிழ்மொழி அமைய வேண்டும் என்ற நோக்குடன் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சி கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தரப்பு மக்களையும் திருக்குறளை வாழ்வின் ஒவ்வொரு அங்கமாக கடைபிடிக்க செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இக்கழகம் இயங்கி வருகிறது.
கழக உறுப்பினர்கள் :
தலைவர் : சிவனேசன் சிவபாலன்
உப தலைவர் : வி.தமிழ்மறையான், வி.ராஜாராம்
செயலாளர் : மணிமாறன் ஆறுமுகம்
துணைச் செயலாளர் :மோசஸ் ஆன்டன் சூசைதாசன்
பொருளாளர் : நவநீதன் நீமிநாதன்
துணை பொருளாளர் : கே. பாஸ்கரன்
கழக முகவரி : Thiruvalluvar Tamil Valarchik Kazhakam
10, Anson Road 22-01A, International Plaza Singapore 079903 இணையதளம் : http://www.tamilvalluvam.org/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
மும்பை: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனுக்கு கருணை காட்டப்படாது என கூறியுள்ள சீனிவாசன் அவர் மீது விரைவாக ...
மே 25,2013 IST