ஆலய குறிப்பு : மலேசியாவின் செபராங் பெராய் நகரின் நிபோங் திபால் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆலயம். ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அற்புதமான அழகிய சிற்பங்கள் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் 7 யானைகளின் வடிவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த யானை சிலைகள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 6 சிற்பக் கலைஞர்கள் சுமார் 2 ஆண்டுகளில் உருவாக்கி உள்ளனர். சுமார் 83 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் புனரமைக்கப்பட்டு 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மொத்தம் 16 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று நுழைவு வாயில் கோபுரத்திலும், மற்றவைகள் கருவறையை சுற்றி உள்ள சுவர்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரம் கொண்ட எண்கோண வடிவ மூலஸ்தானம் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் மற்றோரு சிறப்பாகும். கோயிலின் 12 தூண்களிலும் காவல் தெய்வங்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆலய முகவரி : Sri Sithi Vinayagar Devasthanam,
Nibong Tebal, Malaysia.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தில் சித்திரை விஜயம்...
மயிலாடுதுறை: தரங்கம்பாடி வழியாக ஸ்பிரிட் கடத்த முயன்ற லாரியை போலீசார் பிடித்தனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக காரைக்காலுக்கு ஸ்பிரிட் கடத்தப்படுவதாக வந்த ...
மே 22,2013 IST