ஸ்ரீ ஆதி ஈஸ்வரன் ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

ஜூலை 11,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் செந்துல் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு ஆதிஈஸ்வரன் ஆலயம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ராஜகோபுரத்தை கொண்ட ஆலயம் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. 1937ம் ஆண்டு சைவ மதத்தை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. அமைதியையும் புத்துணர்வையும், ஆன்மீக உணர்வையும், ஆத்மாவிற்கு ஊக்கமளித்து மனதின் கவலைகளை விலக்குவதால் இக்கோயிலுக்கு பெரும்பாலானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஸ்ரீ ஆதிஈஸ்வரன் ஆலயம், இந்துக்களின் மயான பூமி அமைந்திருப்பதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. இதனால் மயான கிரியைகள் நடைபெறும் போது அங்கிருந்து வரும் சாம்பல் துகள்கள் ஆலயத்தின் நுழைவு வாயிலில் பரவி கிடக்கின்றன. மயானத்திற்கு எதிராக அமைந்துள்ள கோயில்கள் மிகவும் அரிதான ஒன்றாகும். இத்தகைய கோயில்கள் மோக்ஷ ஆலயங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆதிஈஸ்வரன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், இந்தியாவின் புண்ணிய தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் காசியின் புண்ணிய நதியாம் கங்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். இக்கோயிலை நிறுவிய விஸ்வலிங்கம், காசிக்கு புனித யாத்திரை சென்ற போது, கங்கை நதியில் நீராடச் சென்றுள்ளார். அப்போது நர்மதை நதி கங்கையில் கலக்கும் இடத்தில் இந்த சிவலிங்கத்தை விஸ்வலிங்கம் கண்டெடுத்தார்.
ஆதி ஈஸ்வரன் ஆலயத்தில் மனமுறுகி வேண்டும் பக்தர்கள் பலர் தங்களின் கவலைகள் தீர்ந்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த கதைகளும் பக்தர்களால் கூறப்படுகிறது. இக்கோயிலில் தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வந்த வழக்கறிஞர் ஒருவர், நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தொழிலில் கடும் நஷ்டத்தை சந்தித்த வியாபாரி ஒருவர் இக்கோயிலுக்கு அபிஷேகத்திற்காக தொடர்ந்து நன்கொடை வழங்கி வந்தார். வெகு விரைவிலேயே அவர் தான் தொழிலில் இழந்த செல்வத்தை மீண்டும் அடைந்தார். அதுமட்டுமின்றி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பக்தர், தொடர்ந்து இவ்வாலயத்திற்கு வந்து சிவனுக்கு உரிய மகாமிருத்யன்ஜயா மந்திரத்தை பாராயணம் செய்து வந்தார். அடுத்த 3 மாதங்களில் அவரது நோய் பரிபூர்ணமாக குணமடைந்த அற்புதம் இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆலய முகவரி : Sri Athi Eeswaran Temple,

Jalan Pusing, Sentul , 51000 Kuala Lumpur, Malaysia.


தொலைப்பேசி : 03-4041 1028


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014

துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014...

அமெரிக்கா, ரிச்மாண்டில் நவராத்திரி

அமெரிக்கா, ரிச்மாண்டில் நவராத்திரி...

ஜாம்பியாவில் நவராத்திரி

ஜாம்பியாவில் நவராத்திரி...

சிங்கப்பூரில் ரத்த தான முகாம்

சிங்கப்பூரில் ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

பார்லி., தாக்குதல்:மர்மநபர்கண்டுபிடிப்பு

டொரண்டோ: கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தி்ல் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் பலியானார். ...

அக்டோபர் 23,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)