ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், மலேசியா

ஜூலை 14,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசியாவின் செலாங்கூர் நகருக்கு அருகில் ரவாங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயம், ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர், பக்தர்களின் காக்கும் காவலனாக தோற்றத்தில் காட்சி அளிப்பதால் அவர் வீரகத்தி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார். இப்பகுதியில் வாழ்ந்த கொடையாளர் ஒருவரின் கனவில் காட்சி தந்த விநாயகர், அரச மரத்தடியில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டார். மேலும் அவ்வாலயத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு நல்வாழ்வு வழங்க விரும்புவதாகவும் விநாயகர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விநாயகரின் கட்டளை ஏற்ற அவர், உடனடியாக அரச மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்றை நிறுவி, தினமும் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தார். 1943ம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் உதவியுடன் அழகிய ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆலய திருப்பணிகள் நிறைவுபெற்று 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட புரோகிதரால் ஆகம முறைப்படி இவ்வாலயத்தின் முதல் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த புரோகிதரின் ஆலோசனையின் பேரில் ஆலயத்தின் புதிய நிர்வாகக் குழுவினரால் இவ்வாலயத்திற்கு வீரகத்தி விநாயகர் ஆலயம் என பெயரிடப்பட்டது. தென்னாந்தியாவில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தை போன்றே இப்பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம் ஆகும்.
ஆபத்து காலங்களில் பக்தர்கள் பலருக்கு விநாயகர் காட்சி தந்து ஆசிகள், நிர்வாக ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி உள்ளார். தீய சக்திகளால் வேதனை அடைந்த சீன பக்தர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வாலய விநாயகர் காப்பாற்றிய அதிசயம் இக்கோயிலில் நிகழ்ந்துள்ளது. அன்று அந்த சீன பக்தர் இக்கோயிலுக்கு தினமும் வர துவங்கியதுடன் தொடர்ந்து பல சேவைகளையும் ஆலயத்திற்காக மேற்கொண்டார். இதே போன்று மற்றொரு சீன பக்தரும் இவ்வாலய விநாயகரின் அருளால் தனது தொழிலில் வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைய‌ை அடைந்துள்ளார்.
ஆலய முகவரி : Sri Veerakathy Vinayagar Temple,

Jln Welmen, 48000 Rawang,(Selangor), Malaysia.


தொலைப்பேசி : 03-60920913, 019-6683295


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா...

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி...

பிரான்ஸ்வாழ் இந்தியர்கள் பிரச்னை: ஒரு கலந்துரையாடல்

பிரான்ஸ்வாழ் இந்தியர்கள் பிரச்னை: ஒரு கலந்துரையாடல்...

மெல்போர்னில் தமிழ் நாடகம்

மெல்போர்னில் தமிழ் நாடகம்...

Advertisement
Advertisement

பெங்களூரூ: 6 வயது மாணவி பலாத்காரம்

பெங்களூரூ: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 6 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...

அக்டோபர் 30,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)