அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஜூலை 14,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசியாவில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் பெனாங் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயமும் ஒன்றாகும். மாரியம்மன் ஆலயம் என பக்தர்களால் பிரபலமாக அழைக்கப்படும் இவ்வாலயத்தின் முக்கிய தெய்வமாக முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறாள். தென்னிந்தியர்களால் கருணையின் வடிவாகவும், சக்தி ஸ்வரூபினியாகவும் முத்துமாரியம்மன் கருதப்பட்டு வருவதால் மகாமாரியம்மன் என்னும் பெயர் ஏற்பட்டதாகும். பெனாங்கில் உள்ள பிற இந்துக் கோயில்களைப் போன்று மகாமாரியம்மன் ஆலயமும் சிறிய மற்றும் எளிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த தென்னிந்தியர்கள் மற்றும் தமிழர்களால் கேப்டன் என அழைக்கப்பட்ட பெட்டி லிங்கம் செட்டி என்பவரால் 1801ம் ஆண்டு இவ்வாலய நிலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறப்பட்டது. தச்சர்கள், கூலி தொழிலாளர்கள், சிப்பாய்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் வாழும் பகுதியிலேயே இக்கோயில் நிலம் அமைந்துள்ளது. பெனாங் துறைமுகத்தில் பணிபுரிவோரே இக்கோயிலைச் சுற்றி அதிகம் வசித்து வருகின்றனர். இந்த இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டம் அமைத்துக் கொண்டனர்.
1833ம் ஆண்டு மகாமாரியம்மன் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டிலேயே இக்கோயிலே நிலையான, முறையான இருப்பிடம் பெற்றதால், இக்கோயில் கட்டப்பட்டது 1833ம் ஆண்டிலேயே என கருதப்படுகிறது. துவக்கத்தில் இக்கோயில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1980ம் ஆண்டிற்கு பிறகே தற்போதுள்ள மகாமாரியம்மன் ஆலயம் என பெயர் ஏற்பட்டது. சிலர் இக்கோயிலை மாரியம்மன் கோயில் என்றே எளிமையாக கூறுகின்றனர். அருள்மிகு மகாமாரியம்மன் கோயிலின் 23 அடி 2 நிலை ராஜகோபுரமும் இக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். இந்த ராஜகோபுரத்தில் 38 இந்து கடவுள்ளகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய விழாக்கள் : நவராத்திரியின் 9ம் நாட்களும் மாரியம்மன், அலங்கரிக்கப்பட்ட மரத்தால் ஆன தேரில் ஊர்வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் லிட்டில் இந்தியா பகுதியின் அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று ஆலத்தை அடைகிறது. இது தவிர ஆடிபூரம், ஆண்டு திருவிழா ஆகியன வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கனடாவில் கோமாதா பூஜை

கனடாவில் கோமாதா பூஜை...

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

Advertisement
Advertisement

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க யோசனை

புதுடில்லி: நாடு முழுவதும் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், விளையாட்டு போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க ...

மே 24,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us