ஜூலை 24,2012 IST
ஆலய வரலாறு : மலேசியாவின் பெனாங் நகரில் உள்ள ஜெலுகோர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வீர மாகாளியம்மன் தேவஸ்தான ஆலயம் ஆகும். ஜெலுகோர் பகுதியில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்த தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இந்த சிறிய ஆலயம் அமைந்துள்ளது. 1960 களின் மத்தியில் பால் வியாபாரம் மற்றும் தேங்காய் தோட்டங்களில் வேலைபார்த்த இந்தியர்களால் இப்பகுதி பெராய் தோலம் என அழைக்கப்பட்டது. ஸ்ரீ வீர மாகாளியம்மன் தேவஸ்தான ஆலய கோபுரம் இப்பகுதியில் மிகவும் பிரபலமானதாகும். அழகிய கலை வேலைப்பாடுகளால் ஆன இந்த கோபுரத்தில் பல்வேறு சிற்பங்களும், தெய்வ சிலைகளும் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும் பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதும் இக்கோபுரத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.
ஆலய முகவரி : Sri Veeraman Kaliamman Devasthanam,
2514 Jalan Sultan Azlan Shah, 11700 Gelugor,Penang,Malaysia.
சென்னை: தம் மீதான அவதூறு வழக்கினை ரத்து செய்ய கோரி கருணாநிதி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கவுதம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த ...
ஜூன் 20,2013 IST