ஆலய வரலாறு : இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹனுமன் ஆலயம், சின்மயா மிஷனால் நிறுவப்பட்டதாகும். இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சலோக ஹனுமன் விக்ரஹம், சின்மயா விஷ்வ சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்டதாகும். இலங்கையில் ராமருடன் ஹனுமன் வீற்றிருப்பது போன்ற படமும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஹனுமன் ஜெயந்தி தினத்தன்று, சுவாமி சித்தார்த்மயானந்தாவால் சின்மயா கீர்த்தி என அழைக்கப்படும் லண்டன் சின்மயா மிஷன் மையத்தில் இவ்விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமருக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சேவை புரிய காத்திருப்பது போது கைகளை கூப்பியபடி ஹனுமன் காட்சி தருவது காண்போரை கவரும் விதமாக உள்ளது. அனைவரும் அர்பணிப்பு மற்றும் சேவை மனதுடன் செயல்பட வேண்டும் என்பதையே இவ்விக்ரஹம் எடுத்துரைப்பதாக உள்ளது. 2 Egerton Gardens, Hendon Central London,England, United Kingdom
ஆலய முகவரி :
Chinmaya Kirti,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
புதுடில்லி: கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தை அடுத்து ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் விதி முறைகள் மாற்றம் ...
மே 19,2013 IST