ஆலய வரலாறு : பிரான்சின் ரியூனியன் தீவில் அமைந்துள்ளது அருள்மிகு விக்னேஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.சுவாமி பிரணவானந்தாவால் 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியூனியனில் சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. ரியூனியன் தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சின்மயா மிஷன், 1996ம் ஆண்டு கூடுதலாக நிலங்களை விலைக்கு வாங்கி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டது. பசுமை நிறைந்த சூழலில் அமைக்கப்பட்ட இம்மையத்திற்கு அருகே சிறிய நதி ஒன்றும் பாய்கிறது. இம்மையத்தின் வழிபாட்டு கூடும் சுமார் 200 பேர் வரை அமைரும் திறன் கொண்டதாகும்.
இந்த அழகிய கட்டிடத்தின் மேல்தளத்தில் 2002ம் ஆண்டு மே மாதம் புதிய கோயில் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 2007ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ஆலய மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சுவாமி பிரணவானந்தா, சுவாமி அத்வயானந்தா ஆகியோர் முன்னிலையில் இக்கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இயற்கை சூழலில் இருப்பது போன்ற உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்துவதற்காக இக்கோயிலின் சுவர்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ண பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக விக்னேஷ்வரர் அல்லது கணேசர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மேலும் சுந்தரமூர்த்தி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படும் சிவபெருமானுக்கும் இக்கோயிலில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ்வரர் மற்றும் சிவன் சன்னதிகள் கற்காளால் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் மனத்திற்கு ஆனந்தம் அளிக்கும் விதமாக துளசி செடிகளும், மலர்ச் செடிகளும் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஆலய முகவரி :
Chinmaya Mission Reunion
Vijnana Nilayam - Centre D'Etudes Vedantiques
10 Rue Sainte Vivienne - Quartier Francais
Sainte Suzanne 97441
Reunion Island,France
தொலைப்பேசி : +33-262-582 439
பேக்ஸ் : +33-262-525 730
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
பழநி: பழநியில், வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநிகோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோவிலில், நேற்று காலை, 11:00 ...
மே 18,2013 IST