ஆலய வரலாறு : பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள மனோரா தீவில் அமைந்துள்ளது ஸ்ரீ வருண தேவ் மந்திர். இந்து புராணங்களின்படி நீர் அல்லது மழையின் தெய்வமாக கருதப்படும் வருண பகவானை வழிபடும் பொருட்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு சரியான தெரியவில்லை. இருப்பினும் தற்போதுள்ள ஆலயத்தின் அமைப்பு 1917-18 ஆகி தேதிகளில் அமைக்கப்பட்டதாகும். தற்போது பூட்டப்பட்டுள்ள இக்கோயிலில் 1950ம் ஆண்டிற்கு பிறகு வழிபாடுகள் நடைபெறுவதில்லை. மனோரா கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயில் தற்போது கடற்காற்றால் சிதலமடைந்து வருகிறது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளும், சில இந்து பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பாகிஸ்தான் இந்து கழகத்திற்கு சொந்தமாக இக்கோயில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
தற்போதைய செய்திமதுரை:மதுரை மாவட்ட போர் விதவையர், போரில் உயிர்நீத்த வீரர்களின் பெற்றோர், ஊனமுற்ற வீரர்கள், அரசின் கருணைத் தொகையை பெற்றிருந்தாலும், முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் ...
மே 23,2013 IST