ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள ஜலன் உத்மா ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மிகப் பிரபலமான இந்துக் கோயில் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயம் ஆகும். இக்கோயில் 1853ம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்த கூலி தொழிலாளிகளால் கட்டப்பட்டது. வாட்டர்வால் ரோட்டில் உள்ள ஏராளமான இந்துக் கோயில்களில் இதுவும் ஒன்று. சாலையோரத்தில் அமைந்திருந்தாலும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது இக்கோயிலில் தனிச்சிறப்பாகும். மிகச் சிறியதாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மக்களிடம் இக்கோயில் மிகவும் பிரபலமானதாகும். தற்போது முனீஸ்வரர் ஆலயம், புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துவதில் மிகவும் பிரபலம். இக்கோயிலில் இந்துக்கள் மட்டுமின்றி ஏராளமான சீனர்களும் தங்களின் புதிய வாகனங்களுக்கு இக்கோயிலில் வந்து பூஜை செய்து எடுத்துச் செல்கின்றனர். Penang, Malaysia.
ஆலய முகவரி : Shree Muniswarar Temple,
Jalan Utama - Jalan Kebun Bunga junction,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட புகார்கள் தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலை, ராஜிவ் சுக்லா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் சந்தித்து ஆலோசனை ...
மே 24,2013 IST