ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் பகுதியில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமையாக ஆலயம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயமாகும். இப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்களை அம்மை நோயில் இருந்து காப்பாற்றியதால் இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் அம்மன், முத்துமாரியம்மன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். முயர் நகரில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 1930ம் ஆண்டுகளில் இவ்வாலயம், தொழிலதிபர் ஒருவரால் புனரமைக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இவ்வாலயத்தின் கருவறையில் திரிசூலம் மட்டுமே நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் திரிசூலத்திற்கு பதிலாக கருங்கல்லால் ஆன முத்துமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
முத்துமாரியம்மன் ஆலயத்தை நிறுவியவர்களில் ஒருவரான சுப்பைய்யா என்பவர் அம்மன் தீவிர பக்தராவார். அவர் இவ்வாலய முத்துமாரியம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபட்டு வந்தார். தினமும் கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கிய பின்னரே தனது அன்றாட பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சுப்பைய்யாவின் தீவிர பக்தி காரணமாக அவர் மீது பாசம் கொண்ட முத்துமாரியம்மனுக்கு அவருக்கு பலமுறை திருக்காட்சி வழங்கி உள்ளார். அவ்வாறு சுப்பைய்யாவிற்கு காட்சி கொடுத்த அம்மன் ஒருமுறை, ஆண்டு திருவிழாவின் போது தான் ஆலயத்தை வலம் வர தேர் அமைக்க வேண்டும் எனவும், மேலும் தான் இளைப்பாற ஊஞ்சல் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இனிமையான தாலாட்டுடன் ஊஞ்சலில் தான் இளைப்பாற விரும்புவதாகவும் அம்மன் தெரிவித்துள்ளார். அம்மனின் வேண்டுகோளை ஏற்ற சுப்பைய்யா, உடனடியாக ஊஞ்சல் ஒன்றை அமைத்துடன் ஊஞ்சல் உற்சவம் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர்துடைப்பதால் இப்பகுதி மக்களிடையே இவ்வாலயம் மிகவும் பிரபலமானதாகும். ஒருமுறை அம்மனின் தீவிர பக்தை ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆதரவின்றி இருந்த அப்பெண் இரவில் கோயிலில் தங்க முடிவு செய்துள்ளார். தூங்கி கொண்டிருந்த அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன், அப்பெண்ணை தட்டிக் கொடுத்து தூங்க வைத்துள்ளார். மறுநாள் அந்த பெண்ணின் பிரச்னைகள் தீர்ந்து, மகிழ்ச்சியுடன் அப்பெண் வீடு திரும்பி உள்ளார். இது போன்று அம்மனின் அருள் பெற்ற பக்தர்கள் இப்பகுதியில் ஏராளம்.
ஆலய முகவரி :
Muthu Mariamman Temple, Muar (Johor),
29, Jln Mohammadiah, 84000 Muar.
தொலைப்பேசி : 06-9515470
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி: பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் ...
மே 24,2013 IST